திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மணிமுத்தாறில் 29 செ.மீ மழை பதிவு... கிடுகிடுவென நிரம்பும் நெல்லை மாவட்ட நீர்நிலைகள்!

Google Oneindia Tamil News

திருநெல்வேலி : வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தென்தமிழகத்தில் மழை சக்கை போடு போட்டு வருகிறது. பருவமழை தொடக்கமே நெல்லை மாவட்ட மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக நல்ல மழை பெய்துள்ளதால் இங்குள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துகொண்டே வருகிறது.

தமிழகத்திற்கு பெரிய அளவில் மழையை கொடுப்பது வடகிழக்குப் பருவமழையே, வடகிழக்குப் பருவமழை பற்றாக்குறையாக பெய்தால் கோடை காலத்தில் மக்கள் சந்திக்கும் தண்ணீர் பிரச்னைக்கு ஓரளவேனும் தீர்வைத் தரும். அக்டோபர் கடைசி வாரத்தில் தொடங்க வேண்டிய வடகிழக்குப் பருவமழையானது நவம்பர் 1ம் தேதி தொடங்கியது.

சென்னையில் இதுவரை அதிக அளவில் மழை பதிவாகாத நிலையில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக டெல்டா மாவட்டங்களில் விடியவிடிய மழை கொட்டித் தீர்க்கிறது, இதனால் நேற்று நாகை, திருவாரூர் உள்ளிட்ட 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தண்ணீர் திருட்டு.. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாக்கும் கிராம மக்கள்! தண்ணீர் திருட்டு.. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாக்கும் கிராம மக்கள்!

விட்டு விட்டு மழை

விட்டு விட்டு மழை

நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அவ்வபோது மழை நனைத்து வருவதால் தீபாவளிக்காக போடப்பட்டுள்ள கடைகளில் வியாபாரம் மந்தமாகவே நடப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மணிமுத்தாறில் கனமழை

மணிமுத்தாறில் கனமழை

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழை செம போடு போடுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மணிமுத்தாறில் 29 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இதே போன்று பாபநாசத்தில் 22 செ.மீட்டர், திருச்செந்தூரில் 11 செ.மீட்டர் என பரவலாக நல்ல கனமழை பெய்துள்ளது.

அணைகள் நிலவரம்

அணைகள் நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் அணைகளில் நீர் நிரம்பி வருகிறது. நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் :
பாபநாசம்: உச்சநீர்மட்டம் : 143அடி, நீர் இருப்பு : 105.6 அடி, நீர் வரத்து : 4748.26 கன அடி,வெளியேற்றம் : 604.75 கன அடி.
சேர்வலாறு அணை : உச்ச நீர்மட்டம்: 156 அடி, நீர் இருப்பு : 112.01 அடி,
மணிமுத்தாறு : உச்ச நீர்மட்டம்: 118 அடி, நீர் இருப்பு : 89.40 அடி, நீர் வரத்து : 2877 கன அடியாக உள்ளது.

கனமழை பதிவு

கனமழை பதிவு

கனமழை அளவு: பாபநாசம்: 160 மி.மீ, சேர்வலாறு : 60 மி.மீ, மணிமுத்தாறு: 286 மி.மீ, கடனா: 27 மி.மீ, ராமா நதி: 30 மி.மீ , கருப்பா நதி:
8 மி.மீ, குண்டாறு: 31 மி.மீ, நம்பியாறு: 125 மி.மீ, கொடுமுடி: 50 மி.மீ, அடவிநயினார்: 7 மி.மீ, அம்பாசமுத்திரம்: 31 மி.மீ, ஆய்குடி: 10.4 மி.மீ,
சேரன்மகாதேவி: 60 மி.மீ, கல்லிடைக்குறிச்சி: 85.8 மி.மீ, நாங்குநேரி: 57 மி.மீ, பாளையங்கோட்டை:11.2 மி.மீ, ராதாபுரம்: 40 மி.மீ, செங்கோட்டை:40 மி.மீ, சிவகிரி: 9 மி.மீ, தென்காசி: 22 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது.

English summary
Northeast monsoon gives heavy rainfall to Thirunelveli district, Manimutharu dam is getting 4748 feet water due to heavy rains yesterday, on that area 29 mm rainfall registered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X