திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி வேற லெவல் ப்ரோ.. நெல்லைக்கு புதிய தோற்றம் தரும் ஸ்மார்ட் சிட்டி.. அசாத்திய வளர்ச்சி அடையும்!

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது நெல்லை மாநகராட்சி புதிய பொலிவை பெற்று வருகிறது. அங்கு பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பாஜக ஆட்சியின் கீழ் பல்வேறு நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோவை, திருச்சி, தூத்துக்குடி, திண்டுக்கல் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருமாற்றம் பெற தொடங்கி உள்ளது.

இந்தியாவில் தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில்தான் அதிகமான ஸ்மார்ட் சிட்டிகள் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இடையில் சுணக்கம் அடைந்து இருந்த ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது.

இனியும் திராவிடம் பேசி ஏமாற்ற முடியாது.. ஸ்டாலின் குறித்து பாஜக தலைவர் முருகன் கடும் தாக்குஇனியும் திராவிடம் பேசி ஏமாற்ற முடியாது.. ஸ்டாலின் குறித்து பாஜக தலைவர் முருகன் கடும் தாக்கு

நெல்லை எப்படி

நெல்லை எப்படி

தற்போது திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை திட்டக்குழு தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள், சாலை மற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நெல்லை பேருந்து சந்திப்பு நிலையமே மொத்தமாக புதிதாக கட்டப்படுகிறது. பேருந்து நிலையம் உள்ளே பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருப்பது போல நவீன வசதிகளுடன் பேருந்து நிலையத்தை அமைக்க உள்ளனர்.

மார்க்கெட்

மார்க்கெட்

அதேபோல் மொத்தமாக அங்கு புதிய வணிக வளாகங்கள் அமைக்கப்பட உள்ளது. திருநெல்வேலி எப்போதும் மார்க்கெட் கடைகளுக்கும் சாந்தி சுவீட்ஸ் கடைகளும் அதிகம் உள்ள நகரம் ஆகும். இந்த மார்க்கெட் கடைகளை மூடிவிட்டு , அப்படியே அதை காம்பிளக்ஸ் போல மாற்ற உள்ளனர். நவீன தொழில்நுட்பம் கொண்ட வணிக வளாகமாக இதை மாற்ற உள்ளனர்.

சாலைகள் அமைக்க உள்ளனர்

சாலைகள் அமைக்க உள்ளனர்

இனி வரும் நாட்களில் அங்கு மொத்தமாக புதிய சாலைகள் அமைக்க உள்ளனர். இதற்காக தற்போது அங்கு சாலை ஓர மின் கம்பங்கள் நீக்கப்பட்டு வருகிறது. புதிய மின் கம்பங்களை வேறு இடத்தில் வைக்க உள்ளனர். சாலை விரிவாக்கும் பணிகளும் விரைவில் நடக்க உள்ளது. அனைத்து விதமான மழை, புயலிலும் தாங்கும் வகையில் அங்கு கட்டுமான பணிகள் நடக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி

அதேபோல் புதிதாக பல்வேறு பயன்பாட்டிற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மேலும் புதிய மாடல் டிராபிக் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேவையை தீர்க்கும் வகையிலும் புதிய டேங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருப்பது போல திருநெல்வேலியை மாற்ற வேகமாக பணிகள் நடந்து வருகிறது. விரைவில் நெல்லை சீமை ஸ்மார்ட் சீமையாக மாறும் என்று கூறுகிறார்கள்.

English summary
Thirunelveli city is getting a brand new face under Smart City Project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X