• search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'அந்த படம்' எடுத்து மிரட்டிய முன்னாள் காதலன்.. கூலிப்படை மூலம் கொல்லத்துணிந்த மாணவி.. நெல்லை பகீர்

Google Oneindia Tamil News

நெல்லை: விடாமல் டார்ச்சர் செய்த முன்னாள் காதலனை நெல்லையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவனுடன் நான் நெருக்கமா இருக்கும் படங்களை எங்க வீட்டில் காட்டுவதா மிரட்டுறான். அவனை கொலை செய்தால் மட்டுமே என்னால நிம்மதியா வாழ முடியும். நம்ம சமுதாயத்தைச் சேர்ந்த நீங்கள் எனக்கு உதவி செய்யணும். அதற்காக நான் உங்களுக்கு 25,000 ரூபாய் தர்றேன்' என்று கூறி கூலிப்படைக்காக ஆட்களை மாணவி ஏவிவிட்ட தகவலை கேட்டு போலீசார் ஆடிப்போய்விட்டனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷிடம், இளைஞர் ஒருவர் உயிர் பயத்துடன் ஓடிவந்து புகார் ஒன்றை அளித்தார். அவர் தன்னை கொல்ல சிலர் முயன்றதாகவும், மலையில் அவர்கள் பதுங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

பயங்கர ஆயுதங்கள்

பயங்கர ஆயுதங்கள்

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், களக்காடு மலையில் பதுங்கியிருந்த 4 இளைஞர்களை போலீஸ் டீம் உடன் சென்று மடக்கி பிடித்தார். 2 பேர் தப்பிவிடடனர். பிடிபட்ட முத்துமனோ, சந்திரகேகர், மாதவன், கண்ணன் ஆகிய நான்கு பேரும் 7 நாட்டு வெடிகுண்டுகள், 4 அறிவாள்களுடன் இருந்தனர்.

காதலிச்சோம்

காதலிச்சோம்

அவர்கள் ஏன் குறிப்பிட்ட இளைஞரை கொல்ல முயன்றனர் என்ற தகவல் உண்மையில் பெரும் அதிர்ச்சி ரகம். விடாமல் டார்ச்சர் செய்த முன்னாள் காதலனை பிளஸ் 2மாணவி கொல்ல துணிந்ததும் அதற்காக அவர் கூலிப்படையை ஏவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதானவர்கள் போலீசாரிடம் கூறும் போது ``நாங்க எல்லாரும் நண்பர்கள். வேலை இல்லாததால் ஊர் சுற்றிக் கொண்டிருந்தோம். அண்மையில் தினங்களுக்கு முன்பு எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் எங்களை அழைத்து, `என்னை மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தொந்தரவு செய்கிறான். அவன் . பள்ளியில் படிக்கும்போது இரண்டரை வருஷம் நாங்க காதலிச்சோம். இப்போ எனக்கு அவனைப் பிடிக்கவில்லை.

நீங்கள் உதவணும்

நீங்கள் உதவணும்

ஆனாலும் அவன் என்னைத் தொந்தரவு செய்யிறான். அவனுடன் நான் நெருக்கமா இருக்கும் படங்களை எங்க வீட்டில் காட்டுவதா மிரட்டி வருகிறான்.. அவனை கொன்றால் தான் நான் நிம்மதியா வாழ முடியும். நம்ம சமுதாயத்தைச் சேர்ந்த நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். அதற்காக நான் உங்களுக்கு 25,000 ரூபாய் தருகிறேன் என்று உதவி கேட்டுள்ளார்.

கொல்ல முடிவு

கொல்ல முடிவு

பணம் தருவதாக சொன்னதால் மாணவி குறிப்பிட்ட நபரை கொலை செய்ய திட்டமிட்டோம். அவனை ஆள் நடமாட்டம் இல்லாதே பெத்தானியா மலையில் உள்ள பொத்தைக்கு கூட்டிட்டு வர சொன்னோம். அதன்படி அந்த மாணவி, அவசரத் தேவைக்காக ரூ.25,000 பணம் தேவைப்படுவதால் அதை எடுத்துக் கொண்டு மலைப் பகுதிக்கு வருமாறு இளைஞனை அழைத்திருக்கிறார். .

கொல்ல முயற்சி

கொல்ல முயற்சி

அந்த மாணவனும் பணத்தோடு மலைப் பகுதிக்கு வந்தான். அவனை மாணவி அடையாளம் காட்டியதும் மறைந்திருந்த நாங்கள் அவனைச் சுற்றி வளைத்துப் பிடித்தோம். பயந்த அவன், `இனிமேல் அந்த மாணவியை தொந்தரவு செய்ய மாட்டேன். இனி உங்கள் வழிக்கே வர மாட்டேன்' என்று கெஞ்சினான். அவனைக் கொல்ல முயன்றபோது எங்களிடம் இருந்து தப்பியோடிவிட்டான். நாங்கள் அந்த மாணவியை வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டு இங்கேயே ஒளிந்திருந்தோம். ஆனால் போலீசார் பிடித்துவிட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்கள்.

மாணவிக்கு வலை

மாணவிக்கு வலை

இந்தச் சம்பவம் தொடர்பாக கூலிப்படையிடம் உயிர் தப்பிய மாணவன் அளித்த புகாரின் பேரில் கூலிப்படையாகச் செயல்பட்ட முத்துமனோ, சந்திரகேகர், மாதவன், கண்ணன் மற்றும் தப்பிய தீபக்ராஜ், ஊசி பாண்டியன் உள்ளிட்ட 6 பேர் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவி மீதும் கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவின் கீழ் களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிடிபட்ட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தப்பிய மாணவி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

English summary
A Plus 2 girl student from thirunelveli has tried to kill her ex-boyfriend by a mercenary. 4 arrested by kalakkadu police in hills. 2 youths and one girl escape on the spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X