திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய மழை.. மக்கள் ஆனந்தம்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதில் நெல்லை சுற்றுவட்டார பகுதியில் நல்ல இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெவ்வேறு காரணிகளால் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

Thundershowers in Nellai and Srivilliputhur surroundings.. Peoples are happy

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தென்தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

மனிதன் மிருகமாகிய தருணம்.. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியவரை கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன் மனிதன் மிருகமாகிய தருணம்.. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியவரை கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்

மேலும் தூத்துக்குடி, குமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் நெல்லை சுற்றுவட்டார பகுதிகளான கொக்கிரகுளம், வண்ணார்பேட்ட, முருகன்குறிச்சி, பேட்டை உள்ளிட்டபல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நெல்லையில் பெய்து வரும் மழையினால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Thundershowers in Nellai and Srivilliputhur surroundings.. Peoples are happy

இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியிலும் மழை கொட்டி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோயில், வன்னியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

தவிர வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெ

English summary
People are delighted by the rains that have been raining in the surrounding areas of Srivilliputhur in the Nerila district and Virudhunagar district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X