திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு.. கார்த்திகேயனுக்கு ஜாமீன்.. நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் என்ற கார்த்திக் ராஜாவுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி (62). இவர் திமுக பிரமுகர் ஆவார். அவரது கணவர் முருகசங்கரன் (71) மற்றும் அவரது வீட்டு பணிப்பெண் ஆகியோர் கடந்த ஜூலை 23-ம் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 ராகுல் ரகசியப் பயணம் மேற்கொள்வது ஏன்... பாஜக விமர்சனம் ராகுல் ரகசியப் பயணம் மேற்கொள்வது ஏன்... பாஜக விமர்சனம்

உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரி

இந்நிலையில் உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அவர்களது விசாரணையில் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திக்கை கைது செய்து விசாரித்தது. விசாரணையில் அரசியல் போட்டியில் தான் உமா மகேஸ்வரி கொல்லப்பட்டதாக போலீசுக்கு தெரியவந்தது.

திமுக பிரமுகர் கைது

திமுக பிரமுகர் கைது

இதையடுத்து நேற்று, நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தார்கள்.

கார்த்திகேயன்

கார்த்திகேயன்

இந்நிலையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜாவுக்கு வியாழக்கிழமையான இன்று ஜாமீன் வழங்கி நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

90 நாட்களுக்குள்

90 நாட்களுக்குள்

90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்யாததால் அவருக்கு ஜாமீன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக ஒரு வழக்கில் குற்றம்சாட்டி கைது செய்யப்படும் நபர் மீது 90 நாளுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என்பது சட்டவிதியாகும். இந்தவிதியின் காரணமாக கார்த்திகேயனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Nellai first mayor Uma Maheshwari murder case: Nellai Court grants bail to Karthik Raja
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X