முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வேன் கவிழ்ந்து விபத்து... 23 பேர் காயம்
தென்காசி: தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் அதிமுக பிரச்சார கூட்டத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 23 பேர் காயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து பாவூர்சத்திரம் பகுதியில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து அதிமுகவின் ஆர்வத்துடன் வேன்கள் மூலம் வந்தனர்.

அப்படி வந்த ஒரு வேன் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள் உட்பட 23 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.