திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினம் ராத்திரி என்னென்ன நடக்குது தெரியுமா.. கொதித்து பேசி வீடியோ வெளியிட்ட விவசாயி

ராமநதி அணையில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரிக்கை எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    கடையம் ராமா நதி அணையில் விடிய விடிய மணல் கொள்ளை நடக்கிறதாம்.. வீடியோ வெளியிட்ட விவசாயி

    நெல்லை: "இதுக்கு உள்ளே என்னென்ன தவறுகள் நடக்குது தெரியுமா?" என்று மணல் கொள்ளை குறித்து ஒருவர் வீடியோ மூலம் அம்பலப்படுத்தி உள்ளார்.

    நெல்லை மாவட்டம், கடையம் ராமநதி அணைக்கட்டில் கதவுகளின் பூட்டை உடைத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள், தினமும் இரவோடு இரவாக மணல் கொள்ளை அடிப்பதாகவும், இதற்கு போலீசாரே உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Viral Video about Sand Steal in Nellai Ramanadhi Anaikkattu

    இது சம்பந்தமான ஒரு வீடியோவை பேசி மனக்குமுறலை கொட்டி உள்ளார் மதியழகன் என்பவர். இவர் ஒரு விவசாயி. அந்த வீடியோ விவரம் இதுதான்: "அணைக்கு போகக்கூடிய பாதை இது. இதுதான் மெயின் கேட்.. இதுல எவ்வளவு பூட்டு போட்டாலும், பூட்டை உடைச்சிடறாங்க. இதுக்குள்ள போயி என்னென்ன தவறு நடக்குது தெரியுமா? ஃபாரஸ்ட் ஏரியா இது.

    கரும்பு தோட்டத்தில் நாசமாக்கப்பட்ட பெண்கள்..100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கியதால் பரபரப்புகரும்பு தோட்டத்தில் நாசமாக்கப்பட்ட பெண்கள்..100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கியதால் பரபரப்பு

    யாரும் அதிகாரிகள் கண்டுக்கறது இல்லை.. தூர் வாருங்க.. தூர் வாருங்கன்னு சொல்லியும் யாரும் இன்னும் தூர் வாரல. ஆனால் நிறைய தவறுகள், மணல் கொள்ளை, வளங்கள், எல்லா தவறுகளும் இதுக்கு உள்ளே நடக்குது. வர்ற அதிகாரிகள் கிட்ட கூட சொல்லியாச்சு. யாரும் கண்டுக்கலை.

    விவசாயிகளுக்கு இதனால பெரிய பாதிப்பு. இங்க விடிய விடிய லாரி, டிராக்டர் வந்து போய்ட்டே இருக்கு. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிறைய பைசா வாங்கிட்டு, அவங்க பாட்டுக்கு ஜெகஜோதியா இருக்காங்க. பாதிக்கப்படறது பொதுமக்களும் விவசாயிகளும்தான். இதுக்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எங்களுடைய கோரிக்கை!" என்கிறார்.

    English summary
    Viral Video about Sand theft in Ramanadhi Dam near Thirunelveli. The public has requested that the sand be looted
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X