திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடு காட்டுக்குள் நடந்த அதகளம்.. டாக்டரை விரட்டி விரட்டி பிராண்டிய விலங்கு.. அதிர வைக்கும் வீடியோ

டாக்டர் மீது கரடி ஒன்று பாய்ந்து தாக்கிய வீடியோ அதிர்ச்சியை தந்து வருகிறது

Google Oneindia Tamil News

நெல்லை: அப்படியே சினிமாவை போலவே இருக்கிறது இந்த வீடியோவை பார்ப்பதற்கு... காட்டுக்குள் கரடி ஒன்று டாக்டரை விரட்டி விரட்டி பிராண்டி தாக்கும் வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. அப்படியே அவர் மேலே பாய்ந்து பிராண்டி எடுத்துள்ளது அந்த கரடி!

Recommended Video

    Viral video: The bear attacked the veterinary doctor near thenkasi

    தென்காசி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது.. இந்த வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் பல நேரம் தோட்டம், விவசாய பகுதிக்குள்ளும் நுழைந்து விடுகின்றன.

    இதனால் இவைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இப்படித்தான் 2 நாளைக்கு முன்பு கடையம் கடனாநதி வனப்பகுதியில் திரவியம் என்பவர் தோட்டத்தில் ஒரு கரடி புகுந்துவிட்டது.

    அந்த பக்கம் ரைசா.. இந்த பக்கம் மஞ்சு.. நடுவில் கவின்.. அந்த பக்கம் ரைசா.. இந்த பக்கம் மஞ்சு.. நடுவில் கவின்.. "ரமேஷ் எனக்குத்தான்".. கடைசியில் ஒரு கொலை!

     வனப்பகுதி

    வனப்பகுதி

    உடனே திரவியம், வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கவும் அவர்களும் விரைந்து வந்து கூண்டு வைத்து அந்த கரடியை பிடித்தனர். பிறகு திரும்பவும் காட்டில் கொண்டு போய் கொண்டு விட, வனப்பகுதிக்கு சென்றிருந்தனர். அங்கு வைத்து அந்த கூண்டின் கதவையும் திறந்து விட்டுள்ளனர்.. கூண்டு கதவை திறந்தார்களோ இல்லையோ, அந்த கரடி சீறி பாய்ந்து கடிக்க வந்தது.

     டாக்டர் முத்துக்கிருஷ்ணன்

    டாக்டர் முத்துக்கிருஷ்ணன்

    அதை பார்த்து வனத்துறையினர் அலறி அடித்து ஓடினர்.. ஆனாலும் கரடி 2 பேரை தாக்கிவிட்டது.. மேலும் பிறகு அங்கு நிறுத்தப்பட்டிருந்த வண்டியையும் தாக்கியது.. வனத்துறை கால்நடை டாக்டர்கள் முத்துக்கிருஷ்ணன், மனோகரன் இருவருக்குமே பலமான காயங்கள் ஏற்பட்டது. கரடியிடம் இருந்து தப்பிப்பதற்காக டாக்டர் முத்துகிருஷ்ணன் மேலே இருந்து பள்ளத்தில் விழுந்துவிட்டார்.. இதில் அவருக்கு கை எலும்பு முறிவும் ஏற்பட்டது.

    அட்டகாசம்

    அட்டகாசம்

    இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.. ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி, அட்டகாசம் செய்யும் இந்த விலங்குகளை பிடிக்க உயிரையே பணயம் வைத்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.. எந்த விலங்கு எப்படி குணம் மாறி பாயுமோ தெரியாத நிலையில், இந்த வனத்துறையினர் அந்த விலங்குகளை காட்டில் கொண்டு போய்விட்டு விட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்படுவதில்லை என்பதே முக்கிய புகாராக எழுந்துள்ளது.

     வீடியோ

    வீடியோ

    ஒருவேளை அந்த பாதுகாப்பு உபகரணங்கள் தந்தால், கூண்டில் இருந்து விலங்குகளை திறந்துவிடும்போது உயிரை காப்பாற்றி கொள்ள உதவும் என்பதே அனைவரின் கோரிக்கையாக எழுந்துள்ளது. காரணம், இந்த பணி சாதாரணமானதும் இல்லை.. கடந்த 49 நாட்களில் மட்டும் 5 கரடியை பிடித்து காட்டுக்குள் கொண்டுபோய் விட்டுள்ளனர் நம் வனத்துறையினர்.. கூண்டில் இருந்து வெளி வந்த கரடி, வனத்துறையினரை விரட்டி விரட்டி புரட்டி தாக்கும் இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    viral video: The bear attacked the veterinary doctor Injury near thenkasi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X