திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா ரிட்டன்.. பெருசாத்தான் குறி வச்சிருக்கு பாஜக.. சிடி ரவி சொல்வதை பாருங்க

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் பாஜக போட்டியிடும் என்றும் சசிகலா வருகைக்கு பின் மாற்றம் வருமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

நெல்லை வண்ணார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நெல்லை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி ரவி தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் எல். முருகன். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

சசிகலா உடன் சிறையில் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை- சிறை நிர்வாகம் தகவல் சசிகலா உடன் சிறையில் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை- சிறை நிர்வாகம் தகவல்

தமிழகம் வருகை

தமிழகம் வருகை

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி ரவி கூறுகையில், "வரும் 30,31 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பல கூட்டங்களில் தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொள்கிறார்.

பொங்கல் விழா

பொங்கல் விழா

வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துகொள்வோம். தமிழகத்தில் நடந்த வெற்றிவேல் யாத்திரை வெற்றிபெற்றுள்ளது அதுபோன்று நம்ம ஊர் பொங்கல் விழா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மோடி

மோடி

தமிழகத்தில் மோடி தலைமையிலான அரசு 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் உரையாற்றுகையில் திருக்குறள், கம்பராமாயணம், உள்ளிட்ட தமிழ் நூல்களை மேற்கோள் காட்டி தமிழை அங்கீகாரப்படுத்தி பேசி வருகிறார்.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கட்சியை பலபடுத்தி வருகிறோம். ABC என மூன்று பிரிவுகளாக பிரித்து தொகுதியில் பணிகளை செய்துவருகிறோம். A பிரிவில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியகவும் B பலபடுத்தவேண்டிய தொகுதி,C பலவீனமான தொகுதி என பிரித்து பணிள் நடந்து வருகிறது.வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவோம்.

மாற்றம் வருமா

மாற்றம் வருமா

சசிகலா விடுதலையான பிறகு அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்று கேட்கிறீர்கள், அதற்கு பொறுத்து இருந்து பாருங்கள்.(WAIT & SEE) என பதில் அளித்தார். மேலும் மீனவர்கள் படுகொலைக்கு கச்சதீவு வரை சென்று மீனவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக கேட்டதற்கு கச்சதீவை தாரைவார்த்ததற்கு காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தான் காரணம். இந்த பிரச்சனைக்கு பொறுப்பும் அவர்கள் தான்" இவ்வாறு தெரிவித்தார்.

English summary
it remains to be wait and seen whether there will be any change after Sasikala's visit, said CD Ravi, National General Secretary of the BJP in Nellai and in charge of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X