• search
திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.. என் அனுபவம் தான் அவரது வயசு.. முதல்வர் பொளேர்

|

திருநெல்வேலி: உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன். இது போக என்ன தகுதி உள்ளது. எனது அனுபவம் தான் அவரது வயது. திமுக ஒரு கம்பெனி, ஸ்டாலின் தான் தலைவர் மீதி இருப்பவர்கள் எல்லாம் நிர்வாக இயக்குநர்கள் வேறு யாரும் வரமுடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரச்சாரத்தின் போது பேசுகையில், எங்கள் கட்சியில் பலர் இருக்கின்றனர், யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் மக்களோடு மக்களாக இருப்பது அதிமுக கட்சி., மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை தரும் ஆட்சி அதிமுக என்றார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 6-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார் . இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பொதுமக்க மத்தியில் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டத்தில் செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டு பேசினார்.

சிறப்பான ஆட்சி

சிறப்பான ஆட்சி

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், அதிமுக அரசு 30 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழக ஆட்சியையும், அம்மாவின் வழியில் நடக்கும் அதிமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்து எங்கள் ஆட்சியில் கிடைத்த நன்மைகளை எண்ணி பாருங்கள்.

ராதாபுரத்தில் ஐடிஐ

ராதாபுரத்தில் ஐடிஐ

திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என அவதூறு செய்தியை பரப்பி வருகிறார் . ராதாபுரம் தொகுதியில் ஐடிஐ யை கொண்டு வந்திருக்கிறோம். திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும் வகையில் 120 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலவச மடிக்கணிணி

இலவச மடிக்கணிணி

வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம், உவரி கப்பல் மாதா கோவில், ஆற்றாங்கரை பள்ளி வாசல், விசுவாமித்தரர் கோவில், தெற்குகள்ளிகுளம் புனித மாதாகோவில் ஆகியவை சுற்றுலா தளங்கலாக அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட அடுக்கடுக்கான திட்டங்களை இந்த தொகுதிக்கு வழங்கியுள்ளோம். தமிழகம் முழுவதும் 52 இலட்சம் பேரூக்கு மடிக்கணினி கொடுக்கப்பட்டுள்ளது. கிட்ட தட்ட 7000 கோடி ரூபாய்க்கு மேல் இதற்காக செலவிடப்பட்டு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.

அமைதி பூங்கா

அமைதி பூங்கா

ஆனால் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் பொதுமக்களை பார்க்கவில்லை. அதிகாரம் இருக்கும் போது மக்களிடம் மனு வாங்க வில்லை. அதிகாரம் இல்லாதபோது மனு வாங்கி வருகிறார். முதல்வர் குறை தீர்;க்கும் திட்டம் அமைக்கப்பட்டு 9 இலட்சத்து 25 ஆயிரம் மனுக்களை பெற்று அனைத்து மனுக்களையும் பரிசீலணை செய்து 5இலட்சத்து 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருப்பது தமிழகம்தான் இதனை நான் சொன்னால் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளமாட்டார். இந்தியா டுடே என்ற ஆங்கில நாளிதழில் இந்தியா முழுவதும் சட்ட ஒழுங்கில் சிறப்பான செயல்படும் மாநிலம் என ஆய்வு செய்து முதன்மை மாநிலம் தமிழகம் என விருது வழங்கி உள்ளது.

என்ன தகுதி இருக்கிறது

என்ன தகுதி இருக்கிறது

உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது. கருணாநிதியின் பேரன் ஸ்டாலினின் மகன் இது போக என்ன தகுதி உள்ளது. எனது அனுபவம் தான் அவரது வயது. திமுக ஒரு கம்பெனி ஸ்டாலின் தான் தலைவர் மீதி இருப்பவர்கள் எல்லாம் நிர்வாக இயக்குநர்கள் வேறு யாரும் வரமுடியாது. எங்கள் கட்சியில் பலர் இருக்கின்றனர். மக்களோடு மக்களாக இருப்பது அதிமுக கட்சி.

தடையில்லா மின்சாரம்

தடையில்லா மின்சாரம்

விவசாயத்திற்கு வாங்கிய பயிர்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்கிய ஒரே அரசு இந்த அரசு தடையில்லா மின்சாரம் இருப்பதால் புதிது புதிதாக தொழில் நிறுவனங்கள் வருகிறது, இதனால் வேலை வாய்ப்பு பெருகி வருகிறது. தமிழகம் மின் மிகை மாநிலமாக செயல்பட்டு வருகிறது" இவ்வாறு பேசினார். அத்துடன் இரண்டு குழந்தைகளுக்கு முதல்வர் பெயர் சூட்டி மகிழ்ந்தார். இதனைத் தொடர்ந்து களக்காடு சென்ற அவர் மகளிர்குழு பெண்களிடமும் , சேரன்மகாதேவியில் இளம்பெண் இளைஞர் பாசறையினருடன் கலந்துரையாடினார்.

 
 
 
English summary
Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy has criticized that What qualifies is To Udayanidhi. Grandson of Karunanidhi, son of Stalin. What else qualifies. My experience is his age. the DMK as a company, Stalin is the leader and the rest are managing directors.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X