திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீட்டில் பாத்ரூம் இல்லை.. சங்கடத்தில் நெளிந்த ஷாலினி.. தூக்கில் பிணமாக தொங்கிய கொடுமை!

கழிவறை இல்லாததால் தற்கொலை செய்து கொண்டார் இளம் பெண் ஒருவர்

Google Oneindia Tamil News

நெல்லை: மாமியார் வீட்டில் கழிவறை இல்லை.. எப்படியாவது பாத்ரூம் மட்டும் கட்டித்தர சொல்லி பல முறை கேட்டார் இளம்பெண் ஷாலினி.. ஒரு நடவடிக்கையும் கணவர் வீட்டில் எடுக்கவில்லை.. கடைசியில் தூக்கு போட்டு தற்கொலையே செய்து கொண்டார் ஷாலினி.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. களக்காடு அடுத்த சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் ஷாலினி. சசிகுமார் என்பவருடன் 7 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. 3 குழந்தைகளும் உள்ளனர்.

Woman commits suicide due to no toilet in her house

ஆனால் கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்த உடனே ஷாலினிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் பாத்ரூம் இல்லை.. இதனால் நிறைய சங்கடத்துக்கு ஆளானார் ஷாலினி. எப்படியாவது பாத்ரூம் மட்டும் கட்டித்தந்துவிடுமாறு சசிக்குமாரிடம் கேட்டுக் கொண்டே வந்தார்.

"வாங்க தண்ணி அடிக்கலாம்".. ஆசையாக சென்ற பாண்டியன் தலையில் கல்லை போட்டு கொன்ற நண்பர்!

இதோ, அதோ என்று ஏதாவது ஒரு சாக்கை சொன்னாரே தவிர, கழிவறை கட்ட ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இது சில சமயங்களில் வீட்டில் சண்டையாகவும் வெடித்துள்ளது.

இதே மாதிரிதான் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சண்டை வந்துள்ளது. பொறுமை இழந்து, வெறுத்து போன ஷாலினி, தன் ரூமில் தூக்கு போட்டு தற்கொலையே செய்து கொண்டார். விஷயம் கேள்விப்பட்டு ஷாலினியின் பெற்றோர் ஆத்திரமுற்றனர். தங்கள் பெண்ணை அடித்து விட்டதாக போலீசில் புகாரும் செய்தனர்.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்ட அரசு 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இருந்தாலும் இதை பெரும்பாலானோர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால் எத்தனையோ பெண்கள் இன்னமும் கழிவறை இல்லாமல், அந்த சங்கடத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து கிடக்கிறார்கள் என்பதுதான் உண்மை.. நல்லா ஒளிருது டிஜிட்டல் இந்தியா!

English summary
Young woman committed suicide due to there is no toilet in her husband's house near Nellai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X