திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போலீஸ் கஸ்டடியில்.. ரத்த வாந்தி எடுத்த லீலாபாய் திடீர் மரணம்.. நெல்லையில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

நெல்லை: போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில், வடசேரியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவருக்கு வயது 56. தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். கூடங்குளம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர்மீது புகார் எழுந்தது. அதன்பேரில் வள்ளியூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோபரை தேடி வந்தனர்.

Woman in Lock up death near Nellai police station

ஆனால் கிறிஸ்டோபர், இஸ்ரவேல் மனைவி லீலாபாய் என்பவருடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. லீலாபாய் கணவரை 25 வருடங்களுக்கு முன்பு இழந்தவர்.. 2 பிள்ளைகள் உள்ளனர். லீலாபாயுடன் கிறிஸ்டோபர் போனில் பேசி வருவதாகவும், அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து செல்வதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, லீலாபாய் வீட்டுக்கு போலீசார் சென்றபோது, கிறிஸ்டோபர் அங்கு இல்லை. அதனால், போலீசார் லீலாபாயை வள்ளியூர் மகளிர் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். அப்போது லீலாபாய் போலீஸ் ஸ்டேஷனிலேயே திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடையவும், உடனடியாக, தனியார் ஆஸ்பத்திரிக்கும், பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். ஆனால் லீலாபாய் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

கோவையில் மருமகனை குத்தி கொலை செய்த மாமனார்.. அதே நாளில் மகளுக்கு பிறந்தது ஆண் குழந்தைகோவையில் மருமகனை குத்தி கொலை செய்த மாமனார்.. அதே நாளில் மகளுக்கு பிறந்தது ஆண் குழந்தை

இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். போலீசார் கஸ்டடியில் லீலாபாய் மரணம் நிகழ்ந்ததால், குற்றவியல் நீதிபதி முன்புதான் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது சட்டம். அதன்படி நீதிபதி அலீமா நீதிபதி ஹலீமா முன்னிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிடைத்த பின்னரே லீலாபாய் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

English summary
Woman died during in Lock up inquiry near Nellai and Police are investigating about it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X