திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோயிலின் நடுக்கூடத்தில்.. பிளாஸ்டிக் கூடைக்குள் இருந்து வந்த சத்தம்.. திருவள்ளூரில் பரபரப்பு!

கோயிலில் 10 நாள் குழந்தையை வீசிவிட்டு சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: பச்சிளம் சிசு ஒன்றை கோயிலில் பிளாஸ்டிக் கூடையில் வைத்துவிட்டு சென்ற பெண் யார் என்று தெரியவில்லை.. அந்த குழந்தையை மீட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு ஸ்டேஷனுக்கு உட்பட்டது கொட்டையூர் ஊராட்சி.. இங்கு நரசமங்கலம் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் உள்ள கோயிலில் திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டது.

10 days girl baby rescued near thiruvallur temple

அதனால் அங்கிருந்தோர் குழந்தையை தேட ஆரம்பித்தும் கிடைக்கவில்லை.. பிறகுதான் ஒரு பிளாஸ்டிக் கூடையில் இருந்து சத்தம் வந்ததை கவனித்தனர்.. அந்த கூடையில் 10 நாட்கள் ஆன பெண் குழந்தை கதறி அழுதபடியே இருந்தது.

இதை பார்த்ததும் பதறி போன பொதுமக்கள் உடனடியாக கிராம மக்கள் வட்டாட்சியர் விஜயகுமாரிக்கு தகவல் சொன்னார்கள்.. அவர் விரைந்து கோயிலுக்கு வந்தார்.. மேலும் மப்பேடு போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர்.. உடனடியாக குழந்தையை மீட்டு திருவள்ளூர் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அத்துமீறுகிறதா ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்...? நிஜக் காவலர்களும் நிழல் காவலர்களும் ஒன்றா...?அத்துமீறுகிறதா ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்...? நிஜக் காவலர்களும் நிழல் காவலர்களும் ஒன்றா...?

பச்சிளங்குழந்தை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை இப்போது நன்றாக இருக்கிறதாம். ஆனால் குழந்தையை கோயிலில் வீசிவிட்டு போன பெண் யார் என்று தெரியவில்லை.. மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

English summary
10 days girl baby rescued near thiruvallur temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X