திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1,381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில் தங்க மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

1381 kg Gold seized near Avadi

ஒவ்வொரு மூட்டையும், 25 கிலோவாக இருந்தன. ஓட்டுநரையும், அவருடன் இருந்த மற்றோருவரையும் விசாரித்ததில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் என்றாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால், 1381 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் பூந்தமல்லி காவல்நிலையத்தில், வாகனத்துடன் தங்கத்தை ஒப்படைத்தனர். அங்கு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்தியா முழுவதும் இதுவரை ரூ.2628.43 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.514.57 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Lok sabha elections 2019: 1381 kg Gold seized near Avadi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X