• search
திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

7 அடி நீளம்.. அது பாட்டுக்கு ஜாலியாக நகர்ந்து போனது.. அலறியடித்து ஓடிய பள்ளிப்பட்டு மக்கள்

|
    திருவள்ளூர் அருகே 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது-வீடியோ

    திருவள்ளூர்: அது இஷ்டத்துக்கும் தெருவில் கூலாக போய்க் கொண்டிருந்த மலைப்பாம்பை கண்டு பள்ளிப்பட்டு மக்கள் அலறி அடித்து ஓடினார்கள்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம் வி.ஜி.ஆர்.புரம் ஆகும். இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    7 feet long Snake caught near Thiruvallur

    இந்த கிராமத்தில் ரொம்ப நாளாக ஒரு பிரச்சனை இருக்கிறது என்றால், தெருக்களில் லைட் எரிவது கிடையாது என்பதுதான். காரணம் இந்த கிராமத்துக்கு அருகிலேயே ஒரு மலைப்பகுதியும் உள்ளது என்பதால்தான்.

    இதைபற்றி பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் பலமுறை தெரு மின்விளக்கு இல்லை என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கிராமத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    7 feet long Snake caught near Thiruvallur

    இந்நிலையில் நேத்து ராத்திரி கிராம மக்களில் பலர் தூங்கி கொண்டிருந்தனர். ஒருசிலரின் நடமாட்டம் மட்டுமே தெருக்களில் காணப்பட்டது. அப்போது, அருகில் இருந்த மலையில் இருந்து 7 அடி உயரம் கொண்ட மலைப்பாம்பு கிராமத்துக்குள் நுழைந்து விட்டது. மேலும் அங்குள்ள தெருக்களில் ஊர்ந்து போய் கொண்டிருந்ததை பார்த்து மக்கள் அலறி அடித்து ஓடினர்.

    இது சம்பந்தமாக திருத்தணி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த ஊழியர்கள் அரை மணி நேரம் போராடி உயிருடன் அந்த மலைப்பாம்பை பிடித்து எடுத்துச் சென்றனர்.

    பாம்பு மட்டுமில்லை.. கிராமத்தில் மின் விளக்குகள் இல்லாததனால் தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் தெருக்களிலும் வீடுகளிலும் உள்ளே புகுந்து விடுமாம். இதனால் எப்பவுமே ஒரு பீதியில் வாழ்வதே தங்களுக்கு பிழைப்பாகி விட்டது, என்றும், சீக்கிரமாக இந்த கிராமத்திற்கு மின்விளக்கு அமைத்து தருமாறும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Forest dept caught 7 feet long Python in Pallipattu Village near Thiruvallur
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more