திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயிரை காப்பாற்ற மாஸ்க் போடுங்க, ஊரை காப்பாற்ற இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க.. அதிமுகவின் அடடே போஸ்டர்

Google Oneindia Tamil News

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உயிரை காப்பாற்ற மாஸ்க் போடுங்க! ஊரை காப்பாற்ற இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க..! என்ற வாசகம் அடங்கிய போஸ்டரின் புகைப்படம் அதிமுகவினரால் சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.

Recommended Video

    உயிரை காப்பாற்ற மாஸ்க் போடுங்க, ஊரை காப்பாற்ற இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க.. அதிமுகவின் அடடே போஸ்டர்

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    இதற்காக இன்று முதல் வேட்புமனு துவங்கியுள்ளது வேட்புமனு அளிக்க 4ம் தேதி இறுதி நாள் என அறிவிக்க பட்டது குறுகிய காலங்கள் உள்ளதால் ஆளும் கட்சி - எதிர் கட்சி என இரு பெரும் கட்சிகளும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு தங்களது வெற்றிக்கான முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    5 ஆயிரம் எங்கே என போஸ்டர் ஒட்டிய பாஜக.. பதிலுக்கு திமுகவினர் செய்த சம்பவம்.. பரபர கன்னியாகுமரி 5 ஆயிரம் எங்கே என போஸ்டர் ஒட்டிய பாஜக.. பதிலுக்கு திமுகவினர் செய்த சம்பவம்.. பரபர கன்னியாகுமரி

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலும் உள்ளூர் செல்வாக்கே வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் நன்கு தெரிந்த முகங்கள் வேட்பாளராக நிறுத்த கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர். பல வார்டுகளில் வேட்பாளர் குறித்த அறிவிப்பினை கட்சிகள் வெளியிடுவதற்கு முன்னர் தாங்கள் தான் போட்டியிடப் போகிறோம் என மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர் உள்ளூர் அரசியல் பிரபலங்கள்.போஸ்டர்கள், சமூக வலைதள பதிவுகள் மூலம் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வாக்குகளை அள்ளிக் குவிக்க தயாராகி வருகின்றனர்.

    தேர்தல் திட்டங்கள்

    தேர்தல் திட்டங்கள்

    கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகளை சரி செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து, இன்னும் வழக்கமான தேர்தல் யுத்திகளை மேற்கொண்டு வெற்றி பெற்று தங்கள் மக்கள் பிரதிநிதி கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வீடு வீடாக வாக்கு சேகரிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள்.

    அதிமுக போஸ்டர்

    அதிமுக போஸ்டர்

    இந்த நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி மாநகராட்சி க்கு உட்பட ஆவடி மாநகர மேற்கு பகுதி கோவில்பதாகை 12வது வார்டு அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதில் நமது சின்னம் இரட்டை இலை என புகைப்படம் பதிய பட்டுள்ளது.மேலும் உயிரை காப்பாற்ற மாஸ்க் போடுங்க! ஊரை காப்பாற்ற இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க..! என அச்சிடப்பட்டுள்ளது.

    சமூக வலைதளங்களில் வைரல்

    சமூக வலைதளங்களில் வைரல்

    தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது கொரோனா சூழல் காரணமாக வாக்கு சேகரிப்பிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இணைய வழி வாக்கு சேகரிப்பே கைகொடுக்கும் நிலையில் அதிமுக தனது வாக்கு சேகரிப்பிற்கு நூதனமுறையை கையாண்டு அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது இதனால் ஆவடி மாநகர தேர்தல் களம் சூடுப்பிடிக்க துவங்கி உள்ளது.

    English summary
    In Avadi, Tiruvallur district, a poster photo with the caption 'Put on a mask to save lives, drive to a double leaf to save the town' has been widely circulated on social media by the AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X