திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்ததாக ஊராட்சி செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

    சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமரும், மாநிலங்களில் முதல்வர்களும், மாவட்ட தலைமையகங்களில் மாவட்ட ஆட்சியர்களும், ஊராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்களில் அந்தந்த தலைவர்களும் கொடியேற்றுவது வழக்கம்.

    Athuppakkam panchayat president was stopped to hoist flag by panchayat secretary

    இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் தனது அலுவலகத்தில் சுதந்திர தினவிழாவை நடத்தினார்.

    அப்போது அவர் தேசியக் கொடியை ஏற்ற சென்ற போது அந்த பெண்ணை கொடியேற்ற வேண்டாம் என ஊராட்சி மன்ற செயலாளரும் துணைத் தலைவரின் கணவரும் தடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஊராட்சிக்கு ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த அமிர்தம் தலைவராக உள்ளார்.

    Athuppakkam panchayat president was stopped to hoist flag by panchayat secretary

    கொடியேற்ற சென்ற தம்மை மிகவும் ஏளனமாக விரட்டியது, தனது அலுவலகத்தில் தனது பெயர் பலகை இன்னும் பொருத்தப்படாதது உள்ளிட்ட தனக்கு ஏராளமான அவமானங்கள் தொடர்ந்து நேர்வதாக அமிர்தம் தெரிவித்துள்ளார்.

    இணைய தளத்தில் வெளியான விண்ணப்பமே போலி.... ஒரே போடு போட்ட கோவை மாநகராட்சி ஆணையர்இணைய தளத்தில் வெளியான விண்ணப்பமே போலி.... ஒரே போடு போட்ட கோவை மாநகராட்சி ஆணையர்

    இதுகுறித்து புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் புகாரின் பேரில் ஊராட்சி மன்ற செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    English summary
    Athuppakkam panchayat president was stopped to hoist flag by panchayat secretary, who has been suspended.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X