திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக VS பத்திரிகையாளர்கள்.. தொடரும் மோதல் - இன்றைய சம்பவம் திருவள்ளூரில்! செல்போன் அபேஸ்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

    குறிப்பிட்ட கட்சிகள் மட்டும் தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்க சொல்வதற்கு என்ன காரணம்? *Politics

    திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது.

    திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

     ஒரு மாதம்தான்.. திமுகவில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார்.. உத்தவ் நிலைமைதான்! அண்ணாமலை எச்சரிக்கை ஒரு மாதம்தான்.. திமுகவில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார்.. உத்தவ் நிலைமைதான்! அண்ணாமலை எச்சரிக்கை

    செய்தியாளர் மீது தாக்குதல்

    செய்தியாளர் மீது தாக்குதல்

    அதேபோல் திருவள்ளூரிலும் பாஜக உண்ணாவிரத போராட்ட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது. அதுகுறித்து செய்தி சேகரிக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு செய்தி சேகரித்துக்கொண்டு இருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை அங்கிருந்த பாஜகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது,

     செல்போன் பறிப்பு

    செல்போன் பறிப்பு

    செய்தியாளரின் அடையாள அட்டையை காட்ட சொல்லி பாஜக நிர்வாகி ராஜ்குமார் தாக்குதல் நடத்தியதுடன் செய்தியாளரின் செல்போனையும் பறித்துக்கொண்டு கொடுக்கவில்லை என்ற புகாரளிக்கப்பட்டு உள்ளது. செய்தியாளரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவை பகிர்ந்து மாற்றத்துக்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

    சி.எம்.பி.சி. கண்டனம்

    சி.எம்.பி.சி. கண்டனம்

    இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அந்த அமைப்பு, "திருவள்ளுரில் பாஜக உண்ணாவிரத போராட்டத்தை செய்திசேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது பாஜக நிர்வாகி ராஜ்குமார் தாக்குதல். செல்போனை பறித்துக்கொண்டு தர மறுப்பு. காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அண்ணாமலையுடன் வாக்குவாதம்

    அண்ணாமலையுடன் வாக்குவாதம்

    முன்னதாக கடந்த மே மாதம் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது அவரை வரவேற்பதற்கு பாஜக சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், உங்களுக்கு "200 ரூபாய் நிச்சயம்" என்று ஏலம் விடுவதை போல் அவர் பேசியதற்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    பெண் பத்திரிகையாளர்

    பெண் பத்திரிகையாளர்

    அதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையின்போது, அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பாஜக நிர்வாகி நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக நீங்கள் என்னைப் புறக்கணிக்க விரும்பினால், அதை தாராளமாக செய்யுங்கள் என்று பத்திரிகையாளர்களுக்கு அண்ணாமலை பதிலளித்தார்.

    நாமக்கல் சம்பவம்

    இதேபோல் கடந்த ஜூன் மாதம் நாமக்கலில் நடைபெற்ற பாஜகவின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், அண்ணாமலையிடம் கேள்வி கேட்க முயன்ற இருந்த செய்தியாளரை பாஜக தொண்டர்கள் தாக்கினர். உடனடியாக அங்கிருந்த போலீசார் செய்தியாளரை மீட்டு பாஜகவினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    BJP VS Press - Thiruvallur Journalist attacked by BJP caders: பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X