திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனுஸ்ரீ செய்ததில் தப்பே இல்லை.. போலீஸ் நிலையத்தில் பல்பு வாங்கிய விஜயபாஸ்கர்!

விருப்ப பாடம் படிக்க முடியவில்லை என்று தந்தை மீது மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: தனுஸ்ரீ செய்தது சரியே.. ஏன் தெரியுமா? அவருடைய அப்பா மேலேயே போலீசில் புகார் தந்துவிட்டார்!

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஈஸ்வரன் நகரை சேர்ந்த தம்பதி விஜயபாஸ்கர்-சரஸ்வதி. விஜயபாஸ்கர் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக வேலை பார்க்கிறார்.

Daughter complained to the police against father near Thiruvallur

இவர்களுக்கு தனுஸ்ரீ, யாமினிஸ்ரீ என்று 2 மகள்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் சண்டை போட்டுக் கொண்டு கணவன், மனைவி தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

தனுஸ்ரீ திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி பாஸ் ஆகிவிட்டார். தனுஸ்ரீ இதழியல் அல்லது பிஏ (டிபன்ஸ்) படிக்க ஆசைப்பட்டார். ஆனால் அவரது அப்பாவோ பிஎஸ்சி இயற்பியல் அல்லது வேதியியல் படிப்பை சொல்லி கட்டாயப்படுத்தினார். அப்படி இல்லைன்னா, காலேஜ்க்கே போகவே வேண்டாம் என்று கண்டிஷன் போட்டுவிட்டார். அப்பாவுக்கும், மகளுக்கும் இது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில், ஸ்கூலுக்கு மார்க் ஷீட், சர்ட்டிபிகேட் வாங்க சரஸ்வதி சென்றார். ஆனால் அவற்றை விஜயபாஸ்கர் ஏற்கனவே வாங்கிவிட்டு சென்றுவிட்டதாக சொன்னார்கள். அது மட்டும் இல்லை, வீட்டில் இருந்த மகளின் 10-ம் வகுப்பு சர்ட்டிபிகேட்டையும் காணோம். இதை பற்றி அப்பாவிடம் தனுஸ்ரீ வாக்குவாதம் செய்தார். அதற்கு அவர், தான் சொல்ற குரூப் எடுக்கலேன்னா, சர்ட்டிபிகேட்டுகளை தர முடியாது என்று சொல்லிவிட்டார்.

இதனால் மன வருத்தம் அடைந்த தனுஸ்ரீ, தன் அப்பாவை பற்றி வாட்ஸ்-அப் மூலம் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். தகவலறிந்த போலீசாரும் அப்பாவையும்-மகளையும் அழைத்து பேசினர். "பொண்ணுக்கு என்ன படிக்க விருப்பமோ, அதையே படிக்க வைங்க" என்று விஜயபாஸ்கருக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தார்கள்.

English summary
Daughter complained to the Police against her father near Thiruvallur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X