திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷன் கடைகளில் பனைவெல்லம்... அரசு பரிசீலித்து வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விநியோகம் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற நாடார் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், தாம் தினமும் பனங்கருப்பட்டியை தேநீரில் பயன்படுத்தி வருவதாகவும் ரேஷன் கடைகளில் பனைவெல்லம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது எனத் தெரிவித்தார்.

Edappadi palanisami says, Consideration to provide palm Sugar in ration shops

உலகம் வியக்கும் வகையில் கல்வியாலும், உழைப்பாலும் உயர்ந்தவர்கள் நாடார் சமூகத்தினர் என்றும் சொந்த நிதியில் இருந்து ரூ.35 கோடி செலவழித்து தமிழகத்திற்கு சுவாசக் கருவிகள் விநியோகம் செய்ததற்காக ஷிவ் நாடாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

Edappadi palanisami says, Consideration to provide palm Sugar in ration shops

போஸ்டரை கிழிப்பதில் காட்டும் அக்கறையை... மக்கள் பணியில் காட்டுங்கள்... கோவையில் கடுகடுத்த கமல்..!போஸ்டரை கிழிப்பதில் காட்டும் அக்கறையை... மக்கள் பணியில் காட்டுங்கள்... கோவையில் கடுகடுத்த கமல்..!

முன்னதாக பூந்தமல்லியில் அதிமுகவினர் அளித்த உற்சாக வரவேற்பில் நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி என முழக்கங்கள் எழுப்பினர். இதனால் மிகுந்த உற்சாகத்துடன் நாடார் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் மேடையில் வைக்கப்பட்ட பனைவெல்லம் தொடர்பான கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

English summary
Edappadi palanisami says, Consideration to provide palm Sugar in ration shops
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X