திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Exclusive: ஆஹா அழகு.. சந்தன மரத்தில் அத்திவரதர்.. 5 அங்குல உயரத்தில்.. காணக் கோடி கண் வேண்டும்!

Google Oneindia Tamil News

திருமழிசை: திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை சேர்ந்த சிற்பி, 5 அங்குல உயரத்திலாலான அத்திவரதரை தத்ரூபமாக செதுக்கியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்தவர் சிற்பியும், ஜனாதிபதி விருது பெற்ற கலைஞருமான டி.கே.பரணி (50). இவர் ஒற்றை அரிசியில் சிலை, சந்தன மரங்களில் நுண்வேலைப்பாடுகளுடன் சிலைகள் செய்து வருகிறார்.

9-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது மனைவி ரேணுகா, மகன் திலீபன் (20), மகள் திவ்யா (18) ஆகியோரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பரணி இந்த தொழிலை அவரது தந்தையிடம் இருந்து கற்று கொண்டார். ஆனால் அவரது தந்தைக்கு குருவென்று யாருமில்லை. இதை அவராகவே கற்று கொண்டார். சந்தன மரங்களில் நுண்வேலைப்பாடுகள் செய்து வருவதால் குடியரசுத் தலைவரின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

டிகே பரணி

டிகே பரணி

தற்போது காஞ்சி அத்திவரதரை சந்தன மரத்தில் உருவாக்கியுள்ளார். 5 அங்குல உயரம், 4 அங்குல அகலம், 2 அங்குல குறுக்களவுடன் இந்த சந்தன மரச் சிலை நுண்ணிய வேலைப்பாடுகளுடன் உருவாகியுள்ளது. 25 நாட்களில் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளார் டி.கே.பரணி. இந்த சிலையை முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து பரணி தமிழ் ஒன் இந்தியா தளத்துக்கு பேட்டி அளித்தார்.

உருவாக்க வேண்டும்

உருவாக்க வேண்டும்

அவர் கூறுகையில் இந்த தொழில் நலிந்து வரும் நிலையில் உள்ளது. இதை குறிப்பிட்ட சிலர் மட்டுமே செய்து வருகின்றனர். அத்திவரதர் உலகளவில் பிரபலமாகியுள்ளதாலும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாலும் அவரது சிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.

தொழில் பாதிப்பு

தொழில் பாதிப்பு

எனக்கு ஆண்டுக்கு 5 கிலோ சந்தனமரங்கள் தேவைப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக தேனாம்பேட்டையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அரசு மானியத்தில் எங்களை போன்ற தொழிலாளிகளுக்கு வழங்கி வந்தது. ஆனால் தற்போது சந்தன மரங்களை வழங்குவது தடை செய்யப்பட்டுவிட்டதால் எங்கள் தொழில் வெகுவாக பாதிக்கிறது.

டெண்டர்

டெண்டர்

எனது தந்தை வைத்திருந்த சந்தன கட்டைகள் மூலம் நான் வேலை செய்து வருகிறேன். அதுவும் தீர்ந்து விட்டால் என்ன செய்வது என தெரியவில்லை. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருணையுள்ளதுடன் பரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் சந்தன மரங்களை எங்களுக்கு மானியத்தில் வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இது போன்ற தடை இல்லை. சந்தனமரங்களை டெண்டர் எடுத்துக் கொள்ளுமாறு கூறுகின்றனர். ஆனால் ஆண்டுக்கு 5 கிலோ தேவைப்படும் நான் லட்சக்கணக்கில் டெண்டர் எடுக்க தேவையில்லை. மேலும் அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவது என கேள்வி எழுப்பியுள்ளார்.

படேல் சிலை

படேல் சிலை

இவரது பொருட்கள் சென்னை பூம்புகார் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு குஜராத்தில் நர்மதை மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர சிலை திறக்கப்பட்டது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் பூம்புகாரில் விற்பனைக்கு இருந்த டிகே பரணியின் பாரத்மாதா சிலையை வாங்கி சென்று பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர்.

அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர்

2018-ஆம் ஆண்டு இவரது அழகிய வேலைப்பாடுகளுக்கா கமலா விருது வழங்கப்பட்டது. விருதை பரணிக்கு அமெரிக்க பிரதிநிதி ஒருவர் வழங்கியுள்ளார். டெல்லியில் உள்ள தாஜ் கசானா என்ற கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இவரது கைவினை பொருட்களில் ராதாகிருஷ்ணன் சிலையை பிரதமர் மோடி வாங்கி, அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அளித்தார்.

ஊக்கம் தேவை

ஊக்கம் தேவை

2018-ஆம் ஆண்டு இவரது அழகிய வேலைப்பாடுகளுக்காக கமலா விருது வழங்கப்பட்டது. விருதை பரணிக்கு அமெரிக்க பிரதிநிதி ஒருவர் வழங்கியுள்ளார். டெல்லியில் உள்ள தாஜ் கசானா என்ற கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இவரது கைவினை பொருட்களில் ராதாகிருஷ்ணன் சிலையை பிரதமர் மோடி வாங்கி, அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அளித்தார்.

English summary
Kanchipuram Athivaradhar in Sandalwood by Thirumazhisai T.K.Bharani, A National Awardee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X