ஏரியில் வீடு கட்டுவது ‘திராவிட மாடல்’! எல்லோருக்கு வேலை ‘பாட்டாளி மாடல்”.! விளக்கம் தரும் அன்புமணி!
திருவள்ளூர் : பாமகவிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் 75 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்ற முடியும் எனவும், ஏரிகளை மூடி குடியிருப்புகளை கட்டியது தான் திராவிட மாடலாகும் என பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் தலைமை வகித்தா கூட்டத்தில் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
ராமதாசின் படைத்தளபதி ஜி.கே.மணி! ஆசிரியர் டூ பாமக தலைவர்! ஒரே பதவியில் 25 ஆண்டுகள்! ருசிகர பின்னணி!

அன்புமணி ராமதாஸ் பாமக
நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ்," தமிழகத்தின் முன்னேற்றம்தான் பாமகவின் இலக்காகும். அதிகாரம் இல்லாமலேயே தமிழகத்திற்கு பல முன்னேற்றங்களை செய்து வந்துள்ளோம். மேலும் நம்மிடம் அதிகாரம் இருந்தால் பல முன்னேற்றங்களை செய்து தர முடியும். தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாமகாவிடம் தீர்வு, செயல் திட்டங்கள் உள்ளது.

மாணவர்களிடையே குடிப்பழக்கம்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். வருகின்ற தலைமுறையை காக்க 2026ல் பாமக ஆட்சிக்கு வரவேண்டும். திராவிட மாடல் என அவர்கள் கூறுகின்றனர். நாம் பாட்டாளி மாடல் எனக் கூறி வருகிறோம். தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை தமிழகத்தை ஜார்கண்டோடு ஒப்பிடக்கூடாது. சிங்கப்பூருடன் போட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாராயக்கடைகள் இருக்கக்கூடாது.

பெண்களுக்கு பாதுகாப்பு
பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். வேலையின்மை ஒழிக்க வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதுதான் பாட்டாளி மாடல் ஆகும். தமிழக மக்கள் பாமகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நம் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. அதனை நாம் வாக்கு வங்கிகளாக மாற்ற வேண்டும். இந்தியாவை வழிநடத்துகிற அளவுக்கு பாமகாவிடம் செயல்திட்டங்கள் உள்ளது. பாமகவிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் 75 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

திராவிடல் மாடல் என்ன?
ஏரிகளை மூடி குடியிருப்புகளை கட்டியது தான் திராவிட மாடலாகும். தொலைநோக்குப் பார்வை திராவிட கட்சிகளிடம் இல்லை. சென்னையை சுற்றி 10 புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும். திராவிட கட்சிகளிடம் பணம் உள்ளது. நம்மிடம் உழைப்பு உள்ளது. 2026ல் உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும். பாமக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். நம்மிடம் தம்பிகள், தங்கைகள் ஏராளமானோர் உள்ளனர். வாருங்கள் மக்களை சந்திப்போம். வெற்றி பெறுவோம்" என அன்புமணி ராமதாஸ் பேசினார்.