திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேசி நல்ல முடிவை எடுங்க.. ஆசிரியர் பகவானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கிய போலீஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Teacher Bhagavan: ஆசிரியர் பகவான் மீது பெண் போலீசில் புகார்- வீடியோ

    திருவள்ளூர்: நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த விவகாரத்தில் ஆசிரியர் பகவானுக்கும் பெண் வீட்டாருக்கும் போலீசார் 10 நாள் அவகாசம் விதித்துள்ளனர்.

    திருவள்ளூர் வெள்ளியகரம் அரசுப்பள்ளி ஆசிரியரான பகவான் கடந்த ஆண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் ஆசிரியர் பகவான் பள்ளியை விட்டு போகக்கூடாது எனக்கூறி கதறி அழுதனர்.

    இதனால் ஆசிரியரும் மாணவர்களை கட்டிக்கொண்டு அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் ஆசிரியர் பகவான்.

    தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான 1.6 லட்சம் கணக்குகள் நீக்கம்.. டுவிட்டர் நிறுவனம் தகவல் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான 1.6 லட்சம் கணக்குகள் நீக்கம்.. டுவிட்டர் நிறுவனம் தகவல்

    காதலித்து ஏமாற்றினார்

    காதலித்து ஏமாற்றினார்

    மாணவர்களின் மனதில் உறுதியான இடம் பிடித்த ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றியதாக ஆசிரியர் பகவான் மீது கவிதா என்ற பெண் திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    காதலித்துவிட்டு மறுப்பு

    காதலித்துவிட்டு மறுப்பு

    வரும் 19ஆம் தேதி ஆசிரியர் பகவானுக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கவிதா என்பவரை காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக ஆசிரியர் பகவான் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

    6 மணி நேரம் விசாரணை

    6 மணி நேரம் விசாரணை

    இந்த புகாரின் அடிப்படையில் நேற்று காலை ஆசிரியர் பகவானை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸ் நேற்று மாலை வரை தொடர்ந்து விசாரணை நடத்தியது. 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    முன்னேற்றம் இல்லை

    முன்னேற்றம் இல்லை

    அப்போது இருவீட்டாரிடமும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    10 நாட்கள் அவகாசம்

    இதையடுத்து பேசி சமரச முடிவை எடுக்குமாறு இருதரப்புக்கும் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர் போலீசார். மக்களின் நன்மதிப்பை பெற்ற ஆசிரியர் பகவான், பெண் புகார், திருமண மோசடி, போலீஸ் விசாரணை என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Police has given 10 days time to take good decision on Teacher Bhagavan Marriage issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X