திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்கா.. எங்களை விட்டுடுக்கா.. போட்றா முட்டியை.. செயின் பறித்த 2 பேருக்கு பெண்கள் தர்ம அடி

Google Oneindia Tamil News

Recommended Video

    செயின் பறித்த 2 பேருக்கு பெண்கள் தர்ம அடி

    திருவள்ளூர்: "முட்டி போடு.. முட்டி போடுங்கடா.. செயின் அறுக்கும்போது உயிர் போயிடுச்சுன்னா எங்கிருந்துடா வரும்? உங்களுக்கு சொந்தமா சம்பாதிச்சு சாப்பிட தெரியாதா" என்று செயின் பறிக்க முயன்ற 2 இளைஞர்களை பெண்கள் வெளுத்து எடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    ரமணா நகரில் வசித்து வருபவர் தெய்வானை. இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் இரு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் போட்டிருக்கவும் முகம் சரியாக தெரியவில்லை.

    தெய்வானையிடம் வண்டியை ஸ்லோ செய்த அவர்கள், அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர்.

    ஆபீஸில் லட்சுமியுடன் செம ஜாலி.. ரெய்டு வந்த போலீஸ்.. கூரை மேல் பதுக்கி வைத்ததால் களேபரம்! ஆபீஸில் லட்சுமியுடன் செம ஜாலி.. ரெய்டு வந்த போலீஸ்.. கூரை மேல் பதுக்கி வைத்ததால் களேபரம்!

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    5 சவரன் செயின் என்பதால் அதை அவர்களால் பறிக்க முடியவில்லை. ஆனல் இதற்குள் தெய்வானை திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். இந்த சத்தத்தை கேட்டதும் அந்த பகுதி மக்கள் இரு இளைஞர்களையும் பின்னாடியே துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

    போடு முட்டியை

    போடு முட்டியை

    பிறகு அவர்களின் கைகளை பின்புறமாக கயிற்றால் கட்டி தர்ம அடி கொடுத்தனர். "யாருடா நீங்க.. எங்கிருந்து வர்றீங்க.. முட்டி போடு.. முட்டி போடு" என்று அங்கிருந்தோர் சொன்னார்கள். அதற்கு இளைஞர்கள், தண்டையார்பேட்டை என்றனர்.

    வெளுத்தார்

    வெளுத்தார்

    உடனே தெய்வானை கொதித்து போய் விட்டார்."ஏன்டா.. தண்டையார்பேட்டையில இருந்து இங்கே எதுக்கு வர்றீங்க.. செயின் அறுக்கும்போது உயிர் போயிடுச்சுன்னா எங்கிருந்துடா வரும்? முட்டி போடு... போட்றா முட்டியை.. இவங்களை கட்டி போடுங்க.. உங்களுக்கு சொந்தமா சம்பாதிச்சு சாப்பிட தெரியாதா" என்று சொல்லி இருவரையும் வெளுத்து எடுத்தார்.

    அழுதனர்

    அழுதனர்

    "அக்கா.. எங்களை விட்டுடுங்க.." என்று இருவரும் கெஞ்சி அழுதார்கள். அதற்குள் மீஞ்சூர் போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுக்கவே, விரைந்து வந்தனர். தெருவில் முட்டி போட்டுக் கொண்டிருந்த 2 மாணவர்களையும் கைது செய்து ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

    செலவுக்கு காசு

    செலவுக்கு காசு

    விசாரணையில், தண்டையார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், பிரசாந்த் என்பதும், இவர்கள் 2 பேருமே கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் செலவுக்கு காசு இல்லையாம்.. அதனால் தான் செயின் பறிக்க முயற்சித்தோம் என்று போலீசாரிடம் சொல்லினர். இதையடுத்து விசாரணை தொடர்ந்து நடக்கிறது

    English summary
    Public attack the two College students who tried to Chain snatch Near Minjur public attack the college students who tried to chain snatch in Thiruvallur District. This Video viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X