திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலிரவில் கொலை.. தைலகாட்டில் ஜாலி.. திமுக பிரமுகர் பார்ட்டி.. கிறங்கவைத்த திருவள்ளூர் 2020 டாப்10

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த வருடம் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதுவாகும்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: இந்த 2020-ம் ஆண்டு திருவள்ளுர் மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை அத்தனை எளிதாக மறந்துவிட முடியாது.. அவற்றில் டாப்-10 இடத்தை பிடித்த ஒருசிலவற்றை மட்டும் இப்போது பார்ப்போம்.

Recommended Video

    ரீவைண்ட் 2020.. திருவள்ளூர் டாப் 10..!

    1. திருவள்ளூர் அருகே ஆற்றில் 4 பேர் கத்தியுடன் சுற்றித் திரிந்தனர்.. இவர்கள் மாவட்டத்தையே கிலி கிளப்பி விட்டவர்கள்.. 4 பேரையும் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திருவாலங்காடு ஸ்டேஷனில் ஒப்படைத்தபோதுதான் தெரிந்த்து, திருவாலங்காடு ஒன்றியம் 12-ஆவது வார்டு அதிமுக உறுப்பினரான ஜீவா விஜயராகவன் கொலை செய்ய வந்தவர்களாம் இவர்கள்.

     Rewind 2020- Top 10 incidents happened in Thiruvallur district

    2. அடுத்ததாக, 5 மாத கர்ப்பிணி மகள் மீது, ஆசிட்டை ஊற்றிய பெற்ற அப்பாதான் 2-ம் இடத்தை பிடித்தவர்.. வேப்பம்பட்டு டன்லப் நகரை சேர்ந்த பாலகுமார் என்பவர் ரிடையவர் ஆன ஏட்டு.... இவர் பேச்சை மீறி இவர் மகள் லவ் மேரேஜ் செய்து கொண்டார்.. அந்த ஆத்திரத்தில் 5 மாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் ஆசிட்டை வீசி கொல்ல பார்த்துள்ளார்.

    3. மூன்றாவதாக, வீட்டிற்க்கு தெரியாமல் காதலித்து ஒரு பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டார் சவுந்தர் என்ற இளைஞர்.. பிறகு அந்த பெண்ணை காப்புக்காட்டில் வைத்து முறைதவறி பிரசவமும் பார்த்துள்ளார்.. அதுவும் யூடிப்பை பார்த்து அபார்ஷன் செய்துள்ளார்.. கடைசியில் விஷயம் போலீசுக்கு தெரிந்து, சவுந்தரை கைது செய்துவிட்டனர்.

    4. தைலக்காட்டில் செம உல்லாசமாக இருந்துள்ளது ஒரு ஜோடி.. இந்த சமயத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட 144 ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றுகிறார்களா என திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.. அந்த ட்ரோன் கேமராவை பார்த்ததும், தைல காட்டில் உல்லாசமாக இருந்த ஜோடி, தலை தெறிக்க ஓடி ஓடியது பெரும் வைரலாகி விட்டது.

     Rewind 2020- Top 10 incidents happened in Thiruvallur district

    5. தொடர் பட்டினியால் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தது திருவள்ளூர் மாவட்டத்தையே உலுக்கி எடுத்துவிட்டது.. புதுவாயல் பகுதியில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களை, ஒரு தனியார் கல்லூரியில் தங்க வைத்திருந்தனர்.. ஆனால், சரியான சாப்பாடு இல்லை.. அதனால் போலீசாரிடம் உதவி கேட்டு வந்துள்ளனர்.. அப்போது அவர்களை விரட்டி அடித்தபோது, ஒரு வடமாநில தொழிலாளர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.. அதை பார்த்து பதறிப்போய் பொதுமக்கள் தண்ணீர் தெளித்து எழுப்பியும், தொடர் பட்டினியால் அந்த உயிர் பறிபோய்விட்டது.

     Rewind 2020- Top 10 incidents happened in Thiruvallur district

    6. முதலிரவன்று, கல்யாண பெண்ணை கொடூரமாக கொலை செய்த மணமகன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாவட்ட மக்களை உலுக்கி போட்டுவிட்டது... பொன்னேரி அருகே உள்ளது காட்டூர் கிராமத்தை சேர்ந்த நீதிவாசன் என்பவர், தன்னுடைய முதலிரவில் மனைவி சந்தியாவை கொடூரமாக கொலை செய்துவிட்டு அருகில் இருந்த தோப்பில் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக்கொண்டார்.. ஆனால், இவர்களுக்குள் என்ன நடந்தது? ஏன் இந்த கொலை? தற்கொலை என்பது இதுவரை தெரியவே இல்லை.

     Rewind 2020- Top 10 incidents happened in Thiruvallur district

    7. திமுக பிரமுகர் வைத்த பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா தொற்று பரவிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது.. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த திமுகபிரமுகர் குணசேகரன் தனது 50 ஆவது பிறந்த நாளை படுஜோராக கொண்டாடினார்.. சரக்கு, மட்டன், சிக்கன் என விருந்து வைத்து 500 பேரை அழைத்திருந்தார்.. இதில் 50 பேருக்கு தொற்று வந்துவிட்டது. பிறகு, குணசேகர் உள்பட 50 திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்தது ஆரம்பாக்கம் போலீசார்

    8. கோயிலின் நடுவில் ஒரு கூடையில் இருந்து வந்த குழந்தை சத்தம் பரபரப்பை தந்தது.. மப்பேடு ஸ்டேஷனுக்கு உட்பட்டது கொட்டையூர் ஊராட்சி.. இங்கு நரசமங்கலம் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் உள்ள கோயிலில் திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டது... ஓடி சென்ற மக்கள் அங்கிருந்த கூடை ஒன்றில் பிறந்து 10 நாட்கள் ஆன பெண் குழந்தை கதறி அழுதபடியே இருந்ததை கண்டு கிராம மக்கள் வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்து குழந்தையை ஒப்படைத்தனர். ஆனால், அந்த குழந்தையின் அம்மா யார் என்று இன்னமும் தெரியவில்லை.

     Rewind 2020- Top 10 incidents happened in Thiruvallur district

    9. ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவி அமிர்தம் என்பவர் கலெக்டர் ஆட்சியர் முன்பு தேசியக்கொடி ஏற்றிய சம்பவம் இப்போது வரை பேசப்பட்டு வருகிறது. அமிர்தம் பட்டியலினத்தை சேர்ந்தவர்.. அதனால், தேசியக்கொடியேற்ற விடாமல் அவரை சிலர் தடுத்தனர். உரிமையை பறித்து அவரை ஒதுக்கியும் வைத்தனர். எந்த நிகழ்ச்சியிலும் முன்னிலைபடுத்தாமல் புறக்கணித்தனர்... ஆனால் அமிர்தம் விடவில்லையே.. கடுமையாக போராடி, போலீசார் பாதுகாப்புடன், தேசிய கொடியேற்றினார்.

    10. பழவேற்காட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா குட்டி விமானம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. பழவேற்காடு அருகே மீனவ கிராமத்தில் ஏற்கனவே ஒரு ஆளில்லா குட்டி விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.. இந்நிலையில் மறுபடியும் ஒரு ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கிவிட்டது.. இதை பார்த்த மீனவர்கள் ஷாக் அடைந்தனர்.. அந்த குட்டி விமானம் பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. இப்படி எண்ணற்ற சம்பவங்கள் இந்த வருடம் திருவள்ளூரையே மிரள செய்துவிட்டன.

    English summary
    Rewind 2020- Top 10 incidents happened in Thiruvallur district
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X