திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக ரஜினி பேசியது ஏன்?.. பரபரப்பை கிளப்பிய மாவட்டச் செயலாளர்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: இளைஞர்களுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என ரஜினிகாந்த் கூறியது விஜய் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக இழுப்பதற்காகவே என திருவள்ளூர் மாவட்ட ரஜினி மன்ற செயலாளர் சுந்தரமூர்த்தி பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ரஜினியின் அரசியல் பேச்சு...ரசிகர்கள் குமுறல்

    அண்மையில் ரஜினிகாந்த் இரு முறை மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் சந்திப்புக்கும் வர சொன்னதால் அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஏதேனும் தகவலை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அவரோ கட்சி தொடங்குவது பற்றி எதையும் நேரடியாக குறிப்பிடவில்லை. மாறாக அரசியல் மாற்றத்திற்கு தன்னிடம் மூன்று திட்டங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

    அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு.. மக்களிடம் புரட்சி வெடித்து ரொம்ப நாளாச்சு சார்.. நீங்க ரொம்ப லேட்அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு.. மக்களிடம் புரட்சி வெடித்து ரொம்ப நாளாச்சு சார்.. நீங்க ரொம்ப லேட்

    மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்

    மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்

    அதில் முதல் திட்டமாக தனது கட்சி சார்பாக அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்தார். 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்தார். இது பெரிதும் வைரலானது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    இந்த கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் ரஜினி கூறிய எழுச்சியை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அப்போது மன்றச் செயலாளர் சுந்தரமூர்த்தி கூறுகையில் திமுக இதுவரை ரஜினி மக்கள் மன்றத்தினரை விமர்சிக்கவில்லை. அதற்கு காரணம் கருணாநிதிக்கு ரஜினிகாந்த் ஆதரவாக இருந்ததால் தற்போது திமுகவுக்கும் ஆதரவாக இருப்பார் என அக்கட்சி கருதுகிறது.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    விஜய் ரசிகர் மன்றத்தில் உள்ள இளைஞர்களை கவரும் விதமாகத்தான் கட்சி தொடங்கினால் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்படும் என ரஜினிகாந்த் பேசினார். இது விஜய் ரசிகர்களை கவரும் முயற்சி என தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் ரசிகர்களையும் சீண்டி பார்க்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது.

    ரஜினி மக்கள் மன்றம்

    ரஜினி மக்கள் மன்றம்

    இவரது கருத்தை ரஜினி ரசிகர்களும் கண்டித்து வருகின்றனர். இளைஞர்கள் விஜய் ரசிகர் மன்றத்தில் மட்டும் இல்லை. எனவே ரஜினி கூறியதை மாவட்டச் செயலாளரே தவறாக திரித்து பேசலாமா என கொந்தளித்துள்ளனர். அது போல் விஜய் ரசிகர்களோ ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் மற்ற நடிகர்களின் ரசிகர்களை ஆள்பிடிக்கும் வேலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    English summary
    Rajini Makkal Mandram Thiruvallur District Secretary says that Rajinikanth aims to drag fans from Vijay Makkal Mandram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X