• search
திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

24 வயசு டீச்சர்.. கல்யாணமாகி 2 மாதம்.. புது தாலியின் வாசனை கூட போகலை.. தூக்கில் தொங்கிய பரிதாபம்

|

திருவள்ளூர்: கல்யாணம் முடிந்து 2 மாதம்தான் ஆகிறது.. அதற்குள் வரதட்சணை கொடுமை தாங்காமல் பத்மபிரியா என்ற இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்... தன்னுடைய தற்கொலைக்கு கணவனும், அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என்று கைப்பட லட்டர் ஒன்றையும் எழுதி வைத்துள்ளதால், அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்!

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் பத்மபிரியா... ஸ்கூல் டீச்சர்.. 24 வயதாகிறது.. இவருக்கு மேலூரை சேர்ந்த ராஜாராம் என்பவருடன் 2 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.. ராஜாராம் ஆவடியில் வேலை பார்த்து வரும் ஒரு போலீஸ்காரர்!!

 school teacher committed suicide near thiruvallur due to dowry issue

ஆனால் கல்யாணம் ஆன அன்னைக்கே ராஜாராம் குடும்பத்தினரின் சுயரூபம் கண்டு அதிர்ந்து போனாராம் பத்மபிரியா.. மாமியார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இவர்களின் தொல்லையும், கொடுமையும் தாங்காமல், பத்மபிரியா ஏற்கனவேமாவட்ட எஸ்பி ஆபீசில் தன் கணவர் மீது வரதட்சனை கொடுமை புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், திரும்பவும் வரதட்சணை பிரச்சனை எழுந்துள்ளது.. அப்போது தகராறும் வெடித்துள்ளது.. அதனால் ராஜாராமின் குடும்பத்தினர் பத்மபிரியாவை பெற்றோரின் வீட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்தனர்... அம்மா வீட்டிற்கு வந்தததில் இருந்தே பத்மப்ரியா மிகுந்த மன உளைச்சலுடன் இருந்திருக்கிறார்.

யார் அந்த நடிகர் மகள்.. கோழி பண்ணையில் சிக்கிய காசியின் லேப்டாப்.. பரபரக்கும் கோலிவுட்!

எனினும், மன அழுத்தம் அதிகமாகி தன்னுடைய ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் இதுசம்பந்தமான விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது பத்மபிரியா கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.. அதில், தன்னுடைய தற்கொலைக்கு முழு காரணம், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்" என்று எழுதியிருந்தார். இதன்பேரில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.

அதேபோல, பத்மபிரியாவின் தாயாரும் மீஞ்சூர் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்துள்ளார்.. அதில், "திருமணத்தின்போது விலை உயர்ந்த கார் மற்றும் 50 சவரன் நகை போடவேண்டுமென்று மாப்பிள்ளை கேட்டார்.. அதேபோல செய்தோம்.. ஆனால், என் மகளுக்கு சொகுசுக் காருக்கு பதிலாக அதைவிடக் குறைவான விலை உள்ள காரை வாங்கி தந்தோம்.. கல்யாணம் முடிந்த பின்பு என் மருமகனின் வீட்டிலேயே சாந்திமுகூர்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள்.

அப்போது என் மருமகனின் அண்ணன் ராஜ்கமல்னும் அவரது மனைவி, மாமியார் சேர்ந்து, "நாங்க கேட்ட கார் வாங்கி தரவில்லை. அதனால் முதலிரவு நடக்காது" என்று சொன்னார்கள்.. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதலிரவு ஏற்பாடு செய்தார்கள். மறுநாள் என் மகள், என்னிடம் எனக்கு முதலிரவு நடைபெறவில்லை என்றாள்.. ஏன் என்று கேட்டதற்கு "வரதட்சணை தரவில்லை, மேலும் கணவருக்கும் இன்னொரு பெண் ஒருவருக்கும் பழக்கம் இருப்பதையும் தெரிவித்தார். பின்னர் தனியாக போய் படுத்துக்கொண்டு அந்தப் பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்" என்றாள்.

18.3.2020 அன்று ஆவடியில் உள்ள போலீஸ் அதிகாரியிடமும், திருவள்ளூர் மாவட்ட எஸ்பியிடமும் என் மகள் புகார் கொடுத்தாள். 2 புகார்களும் நிலுவையில் உள்ளன. கடந்த 27.4.2020 அன்று என் மருமகன், என் மகளுக்கு காலை 10.39 மணிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்... அப்போது என் மகள், "என்னை தவறான இடத்தில் கல்யாணம் செய்து தந்துவீட்டீர்கள்.. என் கணவரால் தம்பி, உங்கள் 2 பேர் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்" என்று சொல்லி அழுதாள்.

மகளுக்கு நான் ஆறுதல் சொன்னேன்.. 27.4.2020 அன்று நானும் என் கணவரும் உடல்நலம் சரியில்லாத என் தாயாரை பார்ப்பதற்கு வல்லூருக்கு போய் விட்டோம். அன்று சாயங்காலம் 4 மணிக்கு என் மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக போன் வந்தது.. பத்மபிரியாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும், ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.

தற்கொலை செய்யும் முன்பு கடிதம் ஒன்று எழுதி வைத்திருக்கிறாள்... வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக இருந்த என் மருமகன் ராஜாராம் அவருடைய அண்ணன் ராஜ்கமல் மற்றும் குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து என் மகளுக்குக் கொடுத்த சீர்வரிசைப் பொருள்களை மீட்டுத் தரும்படி மிக்க பணிவுடன் வேண்டுகிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது!!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
school teacher committed suicide near tiruvallur due to dowry issue
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X