திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு-வீடியோ

    திருவள்ளூர்: வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி படித்தால் கண்டிப்பாக சாதனை படைக்கலாம் என தனியார் பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார்.

    திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு எவ்வாறு பயின்றால் சாதனை படைக்கலாம் என்னும் வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    sylendra babu motivational speech in thiruvallur

    இந்நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பள்ளி மாணவிகளிடம் உரையாடினார். அப்போது அவர் கூறுகையில் "வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அதனை சரியாக செயல் படுத்தினால் அனைவரும் கண்டிப்பாக சாதனை படைக்கலாம். பள்ளி பயிலும் வயதில் புரிந்து படித்தால் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க முடியும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் செல்போன் குறைத்தால் அதிக அளவில் சாதிக்க முடியும். எனவே இந்த பள்ளி பருவத்தில் மாணவர்கள் தங்கள் முழு கவனத்தையும் கல்வியின் மீது செலுத்தி முழு கவனத்துடன் பயின்றால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும் என அறிவுரைகளை வழங்கினார்.

    இந்த கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    வேட்டி கட்டிய தமிழர் சிதம்பரம் கைது.. தலைகுனிவு.. தமிழிசை ஆவேசம் வேட்டி கட்டிய தமிழர் சிதம்பரம் கைது.. தலைகுனிவு.. தமிழிசை ஆவேசம்

    இது தொடர்பான பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சைலேந்திரபாபு, "சுமார் 3 ஆயிரம் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படுத்த உற்சாக பேச்சு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். குழந்தைகள் தான் நாம் நாட்டின் சொத்து.குழந்தைகள் அவர்களை அறிவுப்பூர்வமானவர்களாகவும், நல்ல தொழில் செய்யக்கூடியவர்களாகவும், நல்ல அறிவு உடையவர்களாகவும் இருந்தால் உலகத்தில் எந்த நாட்டுன் வேண்டுமானாலும் நாம் போட்டி போடலாம்.

    sylendra babu motivational speech in thiruvallur

    நிறைய பேருக்கு படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும். ஆனால் நிறைய பள்ளிகளை திறந்து வைத்துள்ளார்கள். என்ஜினியரிங் கலலூரிகளில் கூட நிறைய இடம் இன்னும் உள்ளது. இதை மாணர்கள் பயன்படுத்த வேண்டும். தரமான கல்வியை கொடுத்தால் மட்டும் போதாது. கல்வி கற்க மாணவர்களிடைய ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். மாணவர்கள் நிறைய கேள்விகளை கேட்க வேண்டும்" என்றார்.

    English summary
    sylendra babu motivational speech in thiruvallur with student
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X