திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடினார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்த ஆர் கே பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் அரக்கோணம் எம்பி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

Udhayanidhi Stalin says that PM Modi didnt fulfill his promises

அப்போது அவர் கூறுகையில் நீட் தேர்வால் மாணவர்களும், ஜிஎஸ்டியால் பொதுமக்களும் வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியில் பாஜக தமிழகத்தில் அதிமுக அரசுகளால் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.

இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கே வாக்களியுங்கள். திமுக கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 அல்லது 5 பவுனுக்கு கீழ் ஏழைகள் அடகு வைத்த நகைகளுக்கான கடன்கள் ரத்து செய்யப்படும்.

அவர் பேசிட்டு போயிட்டாரு.. இப்போ எங்களுக்குத்தான் பிரச்சனை.. பாமக விரக்தி.. கூட்டணியில் குழப்பம் அவர் பேசிட்டு போயிட்டாரு.. இப்போ எங்களுக்குத்தான் பிரச்சனை.. பாமக விரக்தி.. கூட்டணியில் குழப்பம்

அது மட்டுமில்லை நீட் தேர்வு ரத்து செய்யப்படும். ஜிஎஸ்டியில் உள்ள கடினமான அம்சங்கள் நீக்கப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ 6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் செலுத்தப்படும்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே இன்னும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றார் உதயநிதி.

English summary
Udhayanidhi Stalin says that PM Narendra Modi has not fulfilled any promises which he gave in 2014 Loksabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X