திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலிரவில்.. சந்தியா உள்ளே நுழைந்ததும் ஏன் அலறினார்.. ரூமுக்குள் என்னதான் நடந்தது.. காட்டூர் பரபர!

முதலிரவில் மனைவியை கொன்ற கணவன் தற்கொலை செய்தது ஏன் என்ற விசாரணை நடக்கிறது

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: முதலிரவில் என்னதான் நடந்தது? புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து கொன்றதுடன், தோப்புக்குள் ஓடிப்போய் வேப்பமரத்தில் பிணமாக தொங்கி விட்டார் மாப்பிள்ளை.. முதலிரவில் இவர்கள் இருவரும் பேச ஆரம்பிக்கவும், அது தகராறாக வெடித்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது காட்டூர் கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் நீதிவாசன்.. இவருக்கு சந்தியா என்பவருடன் வீட்டில் பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்தனர். சந்தியாவுக்கு 20 வயதாகிறது.

why husband suicide after murdering his wife in first night room in tiruvallur

ரெட்டிபாளையம் அடுத்த சோமஞ்சேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நீதிவாசன். இவருக்கும் சடையங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் நேற்றுமுன்தினம் கல்யாணம் நடந்தது.. சந்தியாவுக்கு 20 வயதாகிறது.. ஊரடங்கு என்பதால், வீட்டிலியே இந்த கல்யாணம் மிக எளிமையாக நடந்தது.

புதுமண தம்பதிக்கு முதலிரவு ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டது.. பிறகு அந்த அறைக்குள் தம்பதி இருவரும் சென்றனர்.. அப்போதுதான் தகராறு ஏற்பட்டுள்ளது... வாக்குவாதம் முற்றி உள்ளது.. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நீதிவாசன், சந்தியாவை கடப்பாறை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

அந்த ரூமிலேயே சந்தியா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.. அதற்குள் மாப்பிள்ளை தலைமறைவாகி விட்டிருந்தார்.. அவரை தேடிவந்தபோதுபான், வேப்பமரத்தில் நீதிவாசன் பிணமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டறிந்தனர்.. அந்த சடலத்தையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

நொறுங்கிய இதயம்.. நொறுங்கிய இதயம்.. "ப்ளீஸ்.. 2 நிமிஷம்தானா.. முகத்தை ஒருமுறை காட்டுங்க.. கதறிய ஆதிரா.. கேரள கொடுமை

முதலிரவில் இவர்கள் 2 பேரும் என்ன பேசினார்கள்? எதனால் இவர்களுக்குள் பிரச்சனை வந்தது என்றே தெரியவில்லை? இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.. அப்போதுதான் பல தகவல்கள் வெளியாகின. நீதிவாசன் ஒரு தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

சந்தியா இவருக்கு உறவுக்கார பெண்தானாம்.. இந்த கல்யாணத்தை இரு வீட்டிலும் ஒரு வருடத்துக்கு முன்பே முடிவு செய்திருக்கின்றனர்.. கல்யாணம் பேசிவிட்டு, அதற்கு பிறகுதான் மாப்பிள்ளை பற்றி வெளியில் விசாரித்திருக்கிறார்கள் பெண் வீட்டினர்.. அப்போது, நீதிவாசனுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது.. கஞ்சா அடிமை என்று தெரிந்ததுமே கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்பட்டுவிட்டது.. நீதிவாசனுக்கு வேலை இல்லை.. வீட்டிலேயே இருந்தார்.. கையில் காசும் இல்லை.. காசு இல்லாததால் கஞ்சா வாங்க பணமும் இல்லை.. அதனால் லாக்டவுன் சமயத்தில் அவரால் கஞ்சாவை வாங்க முடியாமல் இருந்ததுடன், கஞ்சா புகைக்காமலும் இருந்துள்ளார்.. லாக்டவுன் முழுவதும் மகன் கஞ்சா பிடிக்காததை கண்டு இரு வீட்டினரும் அசந்து போய்விட்டனர்.. நீதிவாசன் திருந்தி விட்டார் என சந்தோஷப்பட்டு, திரும்பவும் கல்யாணத்தை நடத்த முடிவு செய்த, நிச்சயமும் செய்தனர்.

நிச்சயம் முடிந்தவுடன், தம்பதி இருவரும் தினமும் செல்போனில் பேச ஆரம்பித்தனர்.. இதன்பிறகுதான் நேற்றுமுன்தினம் மீஞ்சூர் பகுதியில் ஒரு அவர்களது குலதெய்வ கோயிலில் மிக எளிமையாக கல்யாணம் நடந்துள்ளது. முதலிரவுக்கு அமர்க்களமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.. அப்போது உள்ளே சென்ற தம்பதிக்குள் இந்த கஞ்சா விஷயம் தொடர்பாக பிரச்சனை வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.. ஏனெனில் போன வாரம் நீதிவாசன், கஞ்சா போதையில், அப்பகுதியில் தகராறு செய்திருக்கிறார்.

இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றிருக்கிறது.. ஒரு வாரத்தில் கல்யாணம் என்பதால், சந்தியாவின் முகத்தை பார்த்து வழக்கு பதிவு செய்யாமல், நீதிவாசனை மன்னித்து விட்டுள்ளனர் போலீசார.. நடவடிக்கையும் எதுவும் எடுக்கவில்லை.. அதாவது லாக்டவுன் வரை ஒழுங்காக இருந்தவர், கடந்த வாரமே கஞ்சாவை தொட்டுள்ளார்.. புகைத்துள்ளார்.

அதேமாதிரிதான் முதலிரவு நேரத்திலும் கஞ்சா அடித்துவிட்டு உள்ளே போய் உள்ளார்.. இதையொட்டியே தகராறு நடந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.. எனினும் முதலிரவில் என்னதான் நடந்தது? எதற்கு சண்டை போட்டுக் கொண்டார்கள் என்ற விசாரணை தொடர்கிறது.. 2 பேரின் செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்தும் வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது காட்டூர் கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் நீதிவாசன்.. இவருக்கு சந்தியா என்பவருடன் திருமணம் நடந்தது. முதலிரவில் மனைவியை அடித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். முதலிரவு நேரத்திலும் கஞ்சா அடித்துவிட்டு உள்ளே போய் உள்ளார் நீதிவாசன். இதையொட்டியே தகராறு நடந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. தொடர் விசாரணையும் நடக்கிறது.

English summary
why husband suicide after murdering his wife in first night room in tiruvallur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X