"செம பார்ட்டி".. 21 வயசுதான்.. ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி.. திருவள்ளூர் ஷாக்
திருவள்ளூர்: பார்ட்டிக்கு போய்விட்டு, போதையில் வண்டியை ஓட்டி நம் போலீசாரிடமே வம்பிழுத்து தகராறு செய்துள்ளார் ஒரு வடமாநில பெண்.. அவருக்கு வயது வெறும் 21தான் ஆகிறது..!
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் இந்த பெண்.. பெயர் நித்து... 21 வயதாகிறது.. கல்யாணமும் ஆகிவிட்டது.. கணவர் பெயர் நிகில் பாண்டே.
திருவள்ளூர் அடுத்த மேல் நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த ஒரு வருஷமாக டிரெயினிங் எடுத்து வந்துள்ளார்.. அந்த டிரெயினிங் முடிந்துவிடவும், நிறைவு விழாவை முன்னிட்டு சக நண்பர்கள் பார்ட்டி வைத்துள்ளனர்.. மணவாள நகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் இந்த மெகா பார்ட்டி நடந்துள்ள. அதில் நித்து கலந்து கொண்டார்.. மண்டை நிறைய போதை ஏறும் அளவுக்கு தண்ணி அடித்துள்ளார்.

போதை
பிறகு தன்னுடைய ஜீப்பை, எடுத்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.. போதையில் இருந்த நித்துதான் ஜீப்பை ஓட்டி உள்ளார்.. அவருடன் வேறு யாருமே இல்லை.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த ஜீப் தாறுமாறாக சென்றது.. முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வேன் மீது டபார் என மோதியது.. இது குறித்து போலீசாருக்கு தகவல் சொல்லப்படவும், டிஎஸ்பி துரைபாண்டியன் சம்பவ இடத்திற்கே வந்துவிட்டார்.

பேச்சுவார்த்தை
நித்துவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்... ஆனால் நித்து போதையில் எதை எதையோ உளறினார்.. அவர் பேசுவது ஒன்றும் புரியாமல் போலீசார், அடுத்தடுத்த கேள்விகளை கேட்டு கொண்டிருந்தனர். ஆனால், நித்துவோ, என்னை ஸ்டேஷனுக்கு இப்பவே கூட்டிட்டு போங்க என்று தகராறு செய்ய ஆரம்பித்தார். இரவு நேரங்களில் அப்படி ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல முடியாமல் போலீசார் தொடர்ந்து நித்துவிடம் பேச்சுவார்த்தையிலேயே ஈடுபட்டனர்.

தமிழ்நாடு
அப்போதும் நித்து அடங்கவில்லை.. பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, தன் ஜீப்பை தானேதான் ஓட்டி செல்வேன் என்று அடம் பிடிக்க துவங்கினார்... பிறகு, "இனிமேல் தமிழ்நாட்டுக்கு வரவே மாட்டேன்.. நான் இங்கே வந்ததே தப்பு.." என்று சத்தம் போட்டு சொல்லி கொண்டிருந்தார். இதற்கு பிறகு போலீசார், நித்துவின் செல்போனை வாங்கி, அதில் அவரது நண்பர்களுக்கு தகவலை சொல்லி வரவழைத்தனர்.

விசாரணை
நித்துவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கவும் சொல்லி அவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டு, அந்த ஜீப்பை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்... இந்நிலையில், இன்று காலை, ஜீப்பை பெற்றுக் கொள்ள பெற்றோருடன் நித்து ஸ்டேஷனுக்கு வந்தார்.. போலீசார் நித்துவுக்கு அட்வைஸ்களை தந்தபடியே இருந்தனர்.. எனினும், நடுராத்திரியில், மணவாள நகர் பகுதியில், 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு சூழ்ந்து கொண்டுவிட்டது!