திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பாடா.. ஒரு வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்தார் 64 அடி உயர பெருமாள்!

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை தொட்டது பிரமாண்ட பெருமாள் சிலை

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரமாண்ட விஷ்ணு சிலை… வழி எங்கும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு- வீடியோ

    திருவண்ணாமலை: கோவிந்தா.. கோவிந்தா என்ற கோஷத்துடன் ஒருவழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை தொட்டுவிட்டார் பெருமாள்!!

    வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.

    அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. எங்கெல்லாம் தடங்கல்கள், இடைஞ்சல்கள் வருகிறதோ அங்கெல்லாம் சிலை நிறுத்தப்பட்டு, இடையூறுகள் சரி செய்யப்படுகின்றன.

    இடைஞ்சல்கள்

    இடைஞ்சல்கள்

    வழியில் குறுக்கே வரும் பாலங்கள், கட்டிடங்கள், கடைகள், வீடுகள், ரவுண்டானா என இடித்து அகற்றப்பட்டு பெருமாள் சிலை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகிறது. இடைஞ்சல்கள் வரும் இடங்களில் எல்லாம் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்படுகிறது.

    செல்பிகள்

    செல்பிகள்

    பாதைகள் சரி செய்யப்படும் வரை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருமாளை பார்க்க பக்தர்கள் குவிகின்றனர். பூஜைகளை செய்தும், காணிக்கைகளை செலுத்தியும், செல்பிகளை எடுத்தும் மகிழ்கின்றனர். பிறகு சாலைகள் சீர்செய்யப்பட்டபிறகு, பெருமாளை அந்த பகுதி பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழி அனுப்பி வைத்து வருகின்றனர்.

    தரைப்பாலம்

    தரைப்பாலம்

    இந்நிலையில் பெருமாள் சிலை கிருஷ்ணகிரிக்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டது. ஆனால் அங்குள்ள மேம்பாலம் அருகில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் ராட்சத தடுப்புகள் அமைக்கும் வேலை நடந்து வந்ததாலும், அப்பணிகள் முடியும் வரையிலும் லாரி நிறுத்தி வைக்கப்பட்டது.

    கோவிந்தா முழக்கம்

    கோவிந்தா முழக்கம்

    இதையடுத்து திருவண்ணாமலை கூட்ரோட்டில் திரண்ட மக்கள் திரண்ட மக்கள் கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை வழிபட்டனர். பெருமாளுக்கு தேங்காய்களை உடைத்து, கற்பூர தீபாராதனை காட்டினர். பிறகு தரைப்பாலத்தின் வேலைகள் முடிந்ததையடுத்து பெருமாள் சிலைபெங்களூர் நெடுஞ்சாலையை வந்தடைந்தது. அப்போது கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பெருமாளை வரவேற்று வருகின்றனர்.

    English summary
    64 Feet Permual Statue made from mountain rock in vandavasi will be inaugurated by an organisation in Ejipura Bangalore. Now, this Mega perumal statue have reached bengaluru national highway from vandavasi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X