திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்ஜிஆருக்கு ஏன் காவி சட்டை.. ஓசி முருகன் சொல்லும் சூப்பர் விளக்கம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    MGR Statue also changed to saffron colour| எம்.ஜி.ஆர் சிலைக்கு பூசப்பட்ட காவி சாயம்

    திருவண்ணாமலை: எம்ஜிஆர் சிலைக்கு காவி சட்டை ஏன் என்பது குறித்து அதிமுக நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பொதுமக்கள் எம்ஜிஆரின் நினைவு நாள், பிறந்த நாள் ஆகியவற்றின் போது மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.

    AIADMK explains why Saffron shirt for MGR Statue?

    இந்த நிலையில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதற்கு முன் தினம் எம்ஜிஆர் சிலையை அதிமுக நகர செயலாளர் ஓசி முருகன் தலைமையில் தூய்மைப்படுத்தி காவி நிறத்தில் சட்டை அணிவிக்கப்பட்டது.

    சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இந்த எம்ஜிஆர் சிலைக்கு காவி நிறத்தினாலான சட்டை காணப்பட்டது. எம்ஜிஆர் சிலைக்கு சட்டை, வேட்டி வெள்ளை நிறத்தினால் இருக்கும். ஆனால் தமிழகத்தில் எந்த பகுதியிலும் இது போன்று காவி நிறத்தில் எம்ஜிஆருக்கு சட்டை இல்லை.

    30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு

    ஏற்கெனவே திருவள்ளுவருக்கு காவி வர்ணம் பூசிய போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது எம்ஜிஆருக்கும் காவி சட்டை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகரச் செயலாளர் ஓசி முருகனிடம் விசாரித்த போது நாங்கள் ஆரஞ்சு நிறத்தில்தான் சிலையில் சட்டையின் நிறத்தை மாற்றினோம்.

    இது எங்களுக்கு காவியாக தெரியவில்லை. இப்படி மாற்றப்பட்டிருப்பதால் இப்பகுதியில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

    English summary
    AIADMK activist explains the colour of the shirt for MGR statue is orange not saffron.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X