திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் லடாய்.. அன்புமணி பேச்சால் அதிமுகவினர் அதிருப்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்புமணி ஏன் இப்படி எல்லாம் பேச ஆரம்பித்து இருக்கிறார்- வீடியோ

    ஆரணி: அதிமுக வேட்பாளரிடம் பொதுக்கூட்ட மேடையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கோபமாக பேசியது, அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில், அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு வருவது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் செய்யப்படுகின்றன.

    அந்த வகையில், ஆரணியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக பேசியது, அதிமுக தொண்டர்களிடையே மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    என்னுடைய அண்ணன் அழகிரி.. எடப்பாடியிடம் கெஞ்சினேன்.. நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்என்னுடைய அண்ணன் அழகிரி.. எடப்பாடியிடம் கெஞ்சினேன்.. நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்

    தொண்டருக்கு வாயில் குத்து

    தொண்டருக்கு வாயில் குத்து

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே, வேட்பாளர் அன்புமணி ராமதாஸிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர் வாயில், சரமாரியாக செம்மலை குத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தத் தொண்டர் திமுகவில் இணைந்தார்.

    மறைமுகப் பேச்சு

    மறைமுகப் பேச்சு

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி கைப்பற்ற தூண்டும் விதத்தில், அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக பேசியதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக எம்எல்ஏ ஏழுமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

    வேட்பாளர் எங்கே?

    வேட்பாளர் எங்கே?

    அப்போது, வேட்பாளர் ஏழுமலை மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். இதனால் கோபமடைந்த அன்புமணி, பேசத் தொடங்கியதும், வேட்பாளர் எங்கப்பா என கேட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த ஏழுமலை, நாற்காலியில் இருந்து, வேகமாக எழுந்து வந்தார். இதனை கண்ட அன்புமணி, நாங்க வெயிலில் நின்று கொண்டிருக்கிறோம்.

    அதிமுகவினர் அதிருப்தி

    அதிமுகவினர் அதிருப்தி

    மக்கள் வெயிலில் நிற்கிறார்கள். வேட்பாளர் உட்கார்ந்திருக்கிறார் என்று கூறிய அன்புமணி, பத்து நாட்களுக்கு சேரில் உட்கார கூடாது என்றும், நின்று கொண்டிருக்க வேண்டும் என கோபத்துடன் பேசினார். அவரது பேச்சு அதிமுகவிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரபரப்பட்டு வருகிறது. இதேபோல், தேமுதிகவின் பொருளாளர் விஜயகாந்த் பேசுவதும், சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    English summary
    Lok Sabha Elections 2019: AIADMK volunteers are dissatisfied With Anbumani Ramadoss speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X