திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கந்தசாமி.. இவர்தான் உண்மையான சாமி.. எத்தனை அருமையான விஷயத்தை செய்திருக்கிறார் பாருங்க!

ஏழை தம்பதிக்கு இழந்த சொத்துக்களை கலெக்டர் மீட்டு கொடுத்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கந்தசாமி, எத்தனை அருமையான விஷயத்தை செய்திருக்கிறார் பாருங்க!

    திருவண்ணாமலை: பின்னே என்ன? பெத்தவங்களுக்கு சாப்பாடு போடாத பிள்ளைகளுக்கு எல்லாம் இப்படித்தான் பாடம் சொல்ல வேண்டியிருக்கு!!

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூரை அடுத்துள்ள கிராமம் வேடநத்தம். இங்கு வசித்து வந்த தம்பதிதான் கண்ணன் - பூங்காவனம். இவங்களுக்கு 2 மகன்கள். மகன்களை வளர்க்க பட்ட பாடு இந்த தம்பதிக்கு மட்டும்தான் தெரியும். ரெண்டு பேரையுமே வளர்த்து ஆளாக்கி கல்யாணமும் பண்ணி வைத்தனர்.

    2 பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதால், கண்ணன் - பூங்காவனம் தங்களிடமிருந்த 5 ஏக்கர் நிலத்தை பிள்ளைகளுக்கு சமமாக பிரித்து கொடுத்து விட்டனர். இது 7 வருஷத்துக்கு முன்னேயே நடந்த ஒன்று. தங்கள் பேருக்கு சொத்து எழுதி கொடுத்தவுடன் 2 பிள்ளைகளும் அதோடு சரி.

     துரத்தி விட்டனர்

    துரத்தி விட்டனர்

    பெத்தவங்களை கவனிக்கவே இல்லை. அவங்களுக்கு சாப்பாடு தருவதில்லை. துணிமணி எடுத்து தருவது கிடையாது. இத்தனைக்கும் 2 பையன்களும் அதே ஊரில் மனைவி, குடும்பம் என்றுதான் வாழ்ந்து வருகிறார்கள். கடைசியில் அம்மா-அப்பாவை தங்களது வீட்டிலிருந்தே துரத்தி விட்டார்கள்.

    நடுத்தெருவில் நின்றனர்

    நடுத்தெருவில் நின்றனர்

    இப்படிதான் 7 வருஷமா இந்த தம்பதி அவதிப்பட்டு வந்திருக்கிறார்கள். தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் வீடுகளில் போய் தங்குவது, சாப்பிடுவது என்றே இருந்திருக்கிறார்கள். எத்தனை நாளுக்குத்தான் அடுத்தவர்களுக்கு பாரமா இருப்பது? இவ்வளவு தூரம் வளர்த்து, கல்யாணமும் செய்து, சொத்தையும் எழுதி கொடுத்து, கடைசியில் இப்படி நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்ட மகன்களை நினைத்து மனம் நொந்து போயினர்.

    கண்ணீர் வடித்தனர்

    கண்ணீர் வடித்தனர்

    தங்களது பிச்சையெடுத்து பிழைக்கும் நிலைமையை எண்ணி தினமும் கண்ணீர் வடித்தனர். இப்படி மற்றவர்களுக்கு பாரமாக இருக்க கூடாது என்று நினைத்து இருவரும் ஒரு முடிவெடுத்தார்கள். அதன்படி, நேராக போய் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியை போய் பார்த்தார்கள். மகன்கள் பண்ணின அக்கிரமத்தையெல்லாம் சொன்னார்கள். புகாராக மனு எழுதி கலெக்டரிடம் தந்தார்கள்.

    பத்திர பதிவு

    பத்திர பதிவு

    எல்லா பிரச்சனையையும் கேட்ட கலெக்டர் கந்தசாமி ஒரு அதிரடி முடிவு எடுத்தார். அதன்படி, மகன்கள் பெயருக்கு நிலத்தை எழுதிக் கொடுத்த பத்திரத்தை ரத்து செய்தார். எழுதி கொடுக்கப்பட்ட அந்த நிலம் திரும்பவும் கண்ணன்- பூங்காவனம் தம்பதியின் பெயருக்கே பத்திர பதிவும் செய்து கொடுத்தார். அதோடு அந்த நிலத்தில் தம்பதி தொடர்ந்து விவசாயம் செய்ய கடன் வழங்கியும் உத்திரவிட்டார்.

    சரியான சவுக்கடி

    சரியான சவுக்கடி

    இப்போ, பூங்காவனம் - கண்ணன், இவங்களா பார்த்து இனி யாருக்கு வேண்டுமானாலும் அந்த சொத்துக்களை ஒப்படைக்கலாம்! கலெக்டரின் இப்படி அதிரடியை யாருமே எதிர்பார்க்கவில்லை. சொத்து என்னமோ தம்பதிக்கு கிடைத்தாலும், தங்களுக்கே அது கிடைத்துவிட்டது போல மாவட்ட மக்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம்!! பெத்தவங்களை தவிக்க விட்ட நன்றி கெட்ட பிள்ளைகளுக்கு இதைவிட ஒரு சவுக்கடியை யாராலும் தர முடியாது.

    English summary
    Asset should be trasfer to parents name by Thiruvannamalai Dist. Collector Kandhasamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X