திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிணற்றில் விழுந்துதான் தனநாராயணன் உயிரிழந்தார்.. தவறான தகவல் பரப்பக் கூடாது.. கலெக்டர் எச்சரிக்கை

சிறுவன் ஜீவசமாதி அடைந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்

    திருவண்ணாமலை: சிறுவன் தனநாராயணன் ஜலசமாதி அடைந்து விட்டார் என்று தவறான தகவலை பரப்பக்கூடாது என்றும் அப்படி ஒரு தகவலை இணையத்தில் பரப்பியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

    படவேடு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார். இவரது மகன் தனநாராயணன். 16 வயதாகிறது. நன்றாக படிக்க கூடியவன். 10-ம் வகுப்பில் 465 மார்க் எடுத்திருக்கிறான்.

    இந்நிலையில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனநாராயணன், கடந்த மார்ச் 24-ந்தேதி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவரை தீயணைப்பு துறையினர் விரைந்து சடலமாக மீட்டனர். அதனால் உடலையும் அங்கேயேவிட்டு விட்டு ஆம்புலன்ஸ் சென்றுவிட்டது.

    தண்டவாளத்தில் சென்ற 3 பெண்கள்.. கன நொடியில் தள்ளிவிட்டு உயிரை கொடுத்து காப்பாற்றிய கான்ஸ்டபிள் தண்டவாளத்தில் சென்ற 3 பெண்கள்.. கன நொடியில் தள்ளிவிட்டு உயிரை கொடுத்து காப்பாற்றிய கான்ஸ்டபிள்

    ஜலசமாதி

    ஜலசமாதி

    அப்போதுதான் ஒரு சாமியார் அங்கு வந்து சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டதாக சொல்லி உள்ளார். உடனே பெற்றோரும், தனநாராயணன் உடலை கை, கால்கள் கட்டப்பட்டு தியான நிலையில் அடக்கம் செய்தனர். அதோடு விடாமல் அந்த இடத்தின் அருகே சிறுவனின் போட்டோ வைத்து ஒரு நோட்டீஸ் போர்டும் வைத்துள்ளனர்.

    பூஜிக்கிறார்கள்

    பூஜிக்கிறார்கள்

    அதில் சிறுவனின் அருள்மிகு தவராஜ பாலயோகி சிவானந்த பரமஹம்ச தனநாராயணர் ஜீவசமாதி நிலையம் செல்லும் வழி என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிறுவனின் சமாதியை குடும்பத்தினர் பூஜித்து வருகிறார்களாம்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இந்த நிலையில்தான் சிறுவன் அடக்கம் செய்யப்படும் வீடியோ இணையத்தில் வைரலானது. பெரும் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் கலெக்டர் கந்தசாமி சிறுவனின் உடலை தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அவரது முன்னிலையிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    கலெக்டர் கந்தசாமி

    கலெக்டர் கந்தசாமி

    இதுசம்பந்தமாக கலெக்டர் சொல்லும்போது, "பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனநாராயணனுக்கு வலிப்பு நோய் இருந்திருக்கிறது. சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில்தான் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    அதனை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினரே உறுதி செய்துவிட்டனர். அதனால் சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டார் என்று தவறான தகவலை இணையத்தில் பதிவு செய்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.

    அருளாசி

    அருளாசி

    ஆனால் இன்னொரு பக்கம், இந்தவிஷயம் வேறு விதமாக சொல்லப்படுகிறது. 10-ம் வகுப்பு முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க சிறுவன் விரும்பவில்லை என்றும், சாமியார் ஒருவரின் அருளாசி பெற்று தியானம் செய்து வந்ததாகவும் சிறுவனின் குடும்பத்தினரே சொல்லுகிறார்கள்.

    உரிய விசாரணை

    உரிய விசாரணை

    அதுவும் இல்லாமல் இப்போது உயிரிழந்த சிறுவனை பூஜித்தும் வருகிறார்கள். அதனால் உண்மையியே சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தாரா, அல்லது வேண்டுமென்றே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் உரிய விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

    English summary
    Thiruvannamalai Dist Collector Kanthasamy warning false information spread about Kannamangalam Jeeva Samathi Incident
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X