திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரணியில் சிலிண்டர் வெடித்து 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி.. சோகத்தில் மக்கள்

Google Oneindia Tamil News

ஆரணி: ஆரணியில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகிவிட்டனர். விபத்தில் சிக்கிய மேலும் 5 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Recommended Video

    சிலிண்டர் வெடித்து.. வீடு தரைமட்டம்.. 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - வீடியோ

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதுகாமூர் பகுதி உள்ளது. கமண்டல நாகநதி பகுதியையொட்டி உள்ள இங்கு பூ வியாபாரம் செய்யும் முத்தாபாய் என்பவர் வீட்டில் இன்று காலை சிலிண்டர் ஒன்று அதிக சப்தத்துடன் வெடித்தது.

    "ஜாதி".. முதல்முறையாக.. சசிகலாவுக்கு எதிரான அஸ்திரத்தை கையில் எடுக்கும் எடப்பாடியார்.. இனி என்னாகும்

    3 வீடுகள் தரைமட்டம்

    3 வீடுகள் தரைமட்டம்

    இதனால் அடுத்தடுத்து 3 வீடுகள் தரைமட்டமாகின. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதில் காமாட்சி, அவரது மகன் ஹேம்நாத் (8) உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர். சந்திரம்மா என்பவரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மருத்துவமனையில் 5 பேர்

    மருத்துவமனையில் 5 பேர்

    இதுவரை 5 பேரை தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வாகனம் தீயை அணைத்தது.

    தீபாவளி பண்டிகை

    தீபாவளி பண்டிகை

    இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய நிலையில் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது. சிலிண்டர் வெடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    சிகிச்சை பெறுவது எப்படி

    சிகிச்சை பெறுவது எப்படி

    இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. சிகிச்சை பெற்று வருவோரில் யாராவது கூறினால் மட்டுமே சிலிண்டர் வெடித்தது எப்படி என்பது தெரியவரும். வீட்டுக்குள் இருந்த பட்டாசு ஏதேனும் வெடித்திருக்குமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

    English summary
    Cylinder burst in Arani led to 5 of the housemates in critical stage. Police investigation going on.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X