• search
திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

உணர்ச்சிவசப்பட்ட பழனி.. கொஞ்சம் தண்ணீர் குடிப்பா.. உங்கள் உணர்ச்சிக்கு நன்றி.. நெகிழ்ந்த ஸ்டாலின்!

|

திருவண்ணமாலை: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரச்சாரத்தை ஸ்டாலின் தொடங்கி உள்ளார். முதற்கட்மாக திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு குறைகளை கேட்டார்.

அந்தந்த மாவட்டததின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரச்சாரத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் தொடங்கி உள்ளார்.

திருவண்ணாமலையில் மக்களின் குறைகள் கேட்டு ஸ்டாலின் பேசி வருகிறார். அப்போது ஸ்டாலினிடம் ஒவ்வொருவராக தங்களின் குறைகளை கூறி நிவர்ததி செய்யுமாறு கூறினார்கள்.

கலசபாக்கம் தொகுதி

கலசபாக்கம் தொகுதி

அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம். படித்து முடித்து வேலையில்லாமல் தவிக்கும் கனிமொழி என்ற பெண் பேசுகையில், எனக்கு வேலை கிடைக்கவில்லை. எங்கும் வேலையில்லை. வேலையில்லை என்றே சொல்கிறார்கள். வேலையே கிடைக்காத நிலையில் வங்கியில் பெற்ற கல்வி கடனை அடைக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள். எனவெ கல்வி கடனை ரத்து செய்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்றார். மேலும் கலசபாக்கம் கல்லூரி வாக்குறுதி இப்போது உள்ள அரசால் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை. நிறைவேற்றவில்லை.. எனவே கலசப்பாக்கம் தொகுதியில். அரசு கலை கல்லூரி கொண்டுவர வேண்டும் என்றார்.

கூட்டுறவு கடன் தள்ளுபடி

கூட்டுறவு கடன் தள்ளுபடி

இதற்கு பதில் அளித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், எடப்பாடி அர, நாங்கள் மக்களை ஏமாற்றி எம்பி தேர்தலில் வென்றதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் பொய் கடந்த முறை மத்தியில் ஆட்சிக்கு வர முடியாதததால் கல்வி கடனை ரத்து செய்ய முடியவில்லை நிச்சயம் தமிழக சட்டசபை தேர்தலில வென்ற உடன் தமிழகத்தில் கல்வி கடன் ரத்து செய்யப்படும். ஏனெனில் 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடனை ரத்து செய்தார் மறைந்த முதல்வர் கருணாநிதி.
அதிமுகவினர் தான் கூட்டுறவு கடன் லட்சக்கணக்கில் வாங்கியிருந்தார்கள். திமுகவினர் குறைவாகவே வாங்கியிருந்தார்கள். இது கலைஞரிடம் தெரிவிக்கப்பட்டது அதற்கு கலைஞர், அதிமுக, திமுக. காங்கிரஸ் என எந்த கட்சி என்று பார்க்காமல் தமிழக மக்களாய் பார்த்து அனைவரது கடனையும் தள்ளுபடி செய்தார். எனவே கல்விக்கடன் உறுதியாக ரத்து செய்யப்படும். கலசபாக்கம் தொகுதியில் அரசு கலை கல்லூரி கொண்டுவரப்படும் என்றார்.

பாகுபாடு இல்லாமல் உதவி

பாகுபாடு இல்லாமல் உதவி

திருவண்ணாமலையைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சக்ரவர்த்தி பேசுகையில், முதியோர் உதவித்தொகை வரவில்லை என்று வேதனை தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், கட்சி பாகுபாடு இல்லாமல் கலைஞர் முதல்வராக இருந்த போது உதவி தொகை வழங்கப்பட்டது. எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்கப்பட்டது. இப்போது அரசியல் நோக்கத்துடன் வழங்கப்படுகிறது, முதியோர் உதவித்தொகை கட்சி பாகுபாடு இல்லாமல் வழங்குவேன் என ஸ்டாலின் உறுதி தெரிவித்தார்.

தளபதி ஆட்சி உறுதி

தளபதி ஆட்சி உறுதி

திருவண்ணாமலை அருகே பாவுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் பேசுகையில், நான் ஒரு ஏழை வீட்டு பிள்ளை. நான் தெருத்தெருவாக சென்று திமுகவிற்காக வாக்கு சேகரித்தவன். இப்போது உள்ள ஆட்சியால் எங்கள் ஊரில் குடிநீருக்காக மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எங்கள் ஊர் பிரச்சனை நீங்கள் தீர்க்க வேண்டும். திமுக 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி. தளபதியாரே 2021ல் நீங்கள் தான் முதல்வராக வரப்போகிறீர்கள் உறுதி.. உறுதி என்று ஆவேசமாக என அவர் குரல் எழுப்பினார்.

ஸ்டாலின் நன்றி

ஸ்டாலின் நன்றி

இதற்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறீர்கள். கொஞ்சம் தண்ணீர் குடிங்க.. உங்க ஆர்வத்திற்கும் உணர்ச்சிக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். குடிநீர் பிரச்சனை பற்றி சொல்ல வேண்டுமானால், குடிநீர் வடிகால் வாரியம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியது திராவிட முன்னேற்ற கழகம் தான். தண்ணீர் இல்லாத காடு என ராமநாதபுரம் மாவட்டத்தைச் சொல்வார்கள். அதிகாரிகளை தூக்கி தண்டனைக்கு உரிய ஏரியா என்று கூறி அங்கு போடுவார்கள். ஆனால் கலைஞர் ஆட்சியில் நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது 630 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்திட்டம் செயல்படுத்தப்பட்டது இப்போது அதிகாரிகளே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு போகிறோம். அங்கு தான் தண்ணீர் கிடைக்கிறது என்று சொல்லக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது என்றார்,

English summary
Stalin has started a campaign called 'Stalin in your constituency'. DMK leader MK Stalin first attended the hearing in Thiruvannamalai and heard the grievances.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X