• search
திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் அடுத்தடுத்து மரணம்.. திருவண்ணாமலையில் தொடரும் சோகம்

|
  ருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் அடுத்தடுத்து மரணம்.. சோகத்தில் திருவண்ணாமலை மக்கள்- வீடியோ

  சென்னை: திருவண்ணாமலை என்றாலே மலைகளும் அதை சுற்றிய ஆசிரமங்கள், கோயில்கள், அருணாசலேஸ்வரர், கார்த்திகை தீபம், பௌர்ணமி கிரிவலம் ஆகியன மிகவும் பிரசித்த பெற்றவைகளாகும். அவற்றை தவிர்த்து பார்த்தால் அது ஒரு ஆன்மிக பூமி.

  இங்கு ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மறைந்த சித்தர்கள் கண்களுக்கு புலப்படாமல் ஆசி வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த ஆன்மிக பூமிக்கு சென்றாலே ஒரு பாசிட்டிவி எனர்ஜி பற்றிக் கொள்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

  திருவண்ணாமலைக்கு இத்தனை அடையாளங்கள் இருந்த போதிலும் முக்கிய அடையாளங்களாக ருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

  [தானே புயல், பணமதிப்பிழப்பு விவகாரத்தை முன்கூட்டியே சொன்னவர் மூக்குப்பொடி சித்தர் ]

  திருவண்ணாமலை

  திருவண்ணாமலை

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 1995-ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 7 வயதுடைய ஒரு பெண் யானையை பரிசாக வழங்கினார். அந்த யானைக்கு ருக்கு என பெயரிடப்பட்டது. 30 வயதாக இருந்த இந்த யானை கடந்த 23 ஆண்டுகளாக அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற உற்சவங்களில் பங்கேற்று தொண்டாற்றிவந்தது.

  மிரண்ட ருக்கு

  மிரண்ட ருக்கு

  இந்நிலையில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கோவிலில் இருந்து யானை தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு ருக்கு அழைத்து செல்லப்பட்டது. அப்போது அங்கு நாயும் குரங்கும் சண்டை போட்டதைக் கண்டு ருக்கு மிரண்டு ஓடியது. அப்போது அங்கிருந்த இரும்பு தடுப்புச்சுவற்றில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ருக்குவுக்கு இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.

  இறப்பு

  இறப்பு

  கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு ருக்குவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதைதொடர்ந்து, யானைக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் யானை ருக்குவுக்கு சிகிச்சையளித்தனர். ஆனாலும் ருக்கு உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்றைய தினம் கோயிலின் 5-ம் பிரகாரத்தில் நள்ளிரவு 12.15 மணிக்கு உயிரிழந்தது.

  ருக்கு இல்லாத தீபத் திருநாள்

  ருக்கு இல்லாத தீபத் திருநாள்

  ருக்கு மறைவால் பக்தர்கள் சோகத்தில் மூழ்கினர். இதையடுத்து முதல் முறையாக இந்த ஆண்டு தீபத்திருவிழா ருக்கு இல்லாமல் நடந்தது அவர்களுக்கு மேலும் வருத்தத்தை அளித்தது. ருக்குவுக்கு அடுத்தது மூக்குப்பொடி சித்தரின் மறைவால் பக்தர்கள் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.

  எளிமை விரும்பி

  எளிமை விரும்பி

  அடிக்கடி மூக்குப்பொடியை உபயோகிப்பதால் அவர் பக்தர்களால் மூக்குப்பொடி சித்தர் என அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். மிகவும் எளிமையை விரும்பும் அவர் பல நாட்களுக்கு எதையும் சாப்பிடமாட்டார். ஒரே இடத்தில் தங்க மாட்டார்.

  கண்டுகொள்ளாத சித்தர்

  கண்டுகொள்ளாத சித்தர்

  ஒருவருக்கு அவரது தரிசனம் கிடைத்தால் அன்று முதல் அவருக்கு ஏறுமுகம்தான். இதற்காகவே பல பணக்காரர்கள் கைகளில் பணத்தட்டுகளுடன் அவரை பார்க்க காத்திருப்பர். ஆனால் எதையும் சட்டை செய்யாமல் விரும்பினால் மட்டுமே தரிசனம் கொடுப்பார் மூக்குப் பொடி சித்தர்.

  ரங்கசாமி

  ரங்கசாமி

  மக்களுக்கான இடர்களை முன்கூட்டியே அறிந்து குறிப்பு மூலம் சொன்ன சித்தரை டிடிவி தினகரனும் , புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் அவ்வப்போது போய் பார்த்துவிட்டு வருவது வழக்கம். ருக்கு மறைவால் இன்னும் மீளாத நிலையில் மூக்குப்பொடி சித்தர் மறைவால் திருவண்ணாமலையே சோகத்தில் மூழ்கியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Elephant Rukku and Mookupodi Siddhar were important figures in Tiruvannamalai. This place looks so sad after continuous death of the two in a short time.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more