திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நான் சுஜித் பேசுகிறேன்.. 80 மணி நேரம் மரணத்துடன் போராடியது கொடூரமானது"

Google Oneindia Tamil News

Recommended Video

    திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு

    திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் அரசம்பட்டு கிராமத்தில் ஒரு அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆழ்துளைக் கிணறு ஒன்று மழை நீர் சேமிப்பாக மாற்றப்பட்டது.

    இதையடுத்து மழை நீர் சேகரிப்பாக மாற்றப்பட்ட இடத்தில் சுஜித் நினைவாக ஒரு கல்வெட்டும் திறக்கப்பட்டது. அதை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்துவைத்தார்.

    கருப்பறை

    கருப்பறை

    அந்த கல்வெட்டில் நான் சுஜித் பேசுகிறேன். நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் எனது தாயின் கருவறையில் பிறந்து 2 வயதில் ஆழ்துளைக் கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.

    வாழ முடியாமல்

    வாழ முடியாமல்

    இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் என்னை போல் 80 மணி நேரம் மரணத்துடன் போராடிய அந்த தருணம் மிகுந்த கொடுமையானது. நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனிவரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்து வைக்காமல் என்னை போல் உள்ள குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும் என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

    அஞ்சலி

    அஞ்சலி

    இதில் சுஜித்தின் படத்திற்கு மாணவர்களுடன் சேர்ந்து ஆட்சியர் கந்தசாமியும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நடுக்காட்டுப்பட்டியில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை தவறி விழுந்தார்.

    80 மணி நேர போராட்டம்

    80 மணி நேர போராட்டம்

    அவரை மீட்கும் பணிகள் முடுக்கிவிட்டன. எனினும் 80 மணி நேரத்துக்கு மேலாக போராடியும் சுஜித்தை உயிருடன் மீட்கவில்லை. இதனால் தமிழகமே சோகத்தில் மூழ்கியது.

    English summary
    Inscription was installed at Thiruvannamalai Government school at Pudhu Arasampattu on the memory of Sujith.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X