திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதியாவது ஒன்னாவது.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் சூப்பர் காதல்.. ஹேப்பி கல்யாணம்.. மக்கள் மகிழ்ச்சி!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு திருமணத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: ஒருத்தர் எம்எல்ஏவாக இருந்து கொண்டு கல்யாணம் செய்து கொள்வது என்பது அரிய நிகழ்வுதான்.. அதிலும் சாதி மறுப்பு திருமணம் என்பது அதைவிட அரிதானதுதான்.. அந்த வகையில், தான் காதலித்த பெண்ணையே கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கரம்பிடித்திருப்பது, பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.. அதிமுகவினர் இந்த கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

அதிமுகவின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு... சட்டசபை நடக்கும் சமயங்களில், பிரபுவின் அதிரடிகள் கொஞ்சம் ஃபேமஸ்தான்... தன் தொகுதிக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்து கொண்டே இருப்பார்.

இவரை 2016 சட்டசபை தேர்தலில் கள்ளக்குறிச்சி வேட்பாளராக போட்டியிட வைத்ததே மறைந்த ஜெயலலிதாதான்.. கள்ளக்குறிச்சியை மாவட்டமாக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் இவர்தான் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை நிறைவேற்ற ஜெயலலிதாவும் அன்றைய தினம் வாக்குறுதியும் தந்ததாகவும் அடிக்கடி சொல்வார்.

அதிமுக குழப்பங்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டரில் அதிரடி பதில்.. ஏற்கப்பட்டதா கோரிக்கை? அதிமுக குழப்பங்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டரில் அதிரடி பதில்.. ஏற்கப்பட்டதா கோரிக்கை?

 காதல்

காதல்

இவர் சவுந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.. அவர் ஒரு கல்லூரி மாணவி.. இவரை இன்று சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார் பிரபு.. தியாகதுருகத்தில் உள்ள அவரது வீட்டில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் இந்த கல்யாணம் நடந்து முடிந்தது. இதையடுத்து எம்எல்ஏ பிரபு - சௌந்தர்யா தம்பதிக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 கல்யாணம்

கல்யாணம்

ஆனால், உறவினர்கள் மட்டும் பங்கேற்ற இந்த கல்யாணத்தில் அரசியல் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை... பிரபு அதிமுக அணி பிரிவின் போது தினகரன் ஆதரவாளராக இருந்து வந்தார்.. பிறகு எடப்பாடியாரை சந்தித்து பேசினார்.. இப்போதைக்கு சசிகலா ஆதரவாளர் என்று தொடர்ந்து கூறி வருகிறார்... இருந்தாலும், இவர் விரைவில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்றே சொல்லப்படுகிறது.

 கல்யாணம்

கல்யாணம்

இதில் 2 விஷயங்கள் கவனிக்கத்தக்கவை.. ஒன்று, ஒருவர் எம்எல்ஏவாக இருந்து கொண்டு கல்யாணம் செய்து கொள்வது என்பது அரிதானது.. இன்னொன்று, நம் மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

 சாதி மறுப்பு

சாதி மறுப்பு

இதுபோன்ற செயல்களுக்கு கோர்ட் கண்டித்தும் கூட தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு எம்எல்ஏவே சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளதுதான் அனைவரையும் ஈர்த்து வருகிறது.. இதன் காரணமாகவே, அதிமுக தவிர, பிற கட்சியினரும், பல தரப்பினரும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்... நாமும் புதுமண தம்பதிக்கு வாழ்த்தை சொல்வோம்!

English summary
Kallakurichi ADMK MLA Prabhu weds his lover in style
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X