திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

85 வயதில் முதல்முறையாக வாக்களித்த கன்னியப்பன்.. மலர் அலங்கார காரில் அழைத்து வந்த தி.மலை ஆட்சியர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha election 2019: குடும்பத்தையே மலர் அலங்கார காரில் அழைத்து வந்த தி.மலை ஆட்சியர்- வீடியோ

    வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை சேர்ந்த கன்னியப்பன் தனது வாழ்க்கையில் முதல் முறையாக இன்று வாக்களித்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (85). இவர் சிறு வயது முதலே கொத்தடிமையாக இருந்து வந்தார். விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார்.

    விறகு வெட்டும் தொழில் செய்யும் இவர்கள் வீரம்பாக்கம் புதூர் கிராமத்தில் கடந்த 13 வருடமாக இருந்தனர். இவரது மகள் கருப்பாயி (55), மருமகன் தேவராஜ் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு பாபு (35), பிரபு (32) என்ற மகன்களும், காமாட்சி, ராதிகா என்ற மருமகள்களும் உள்ளனர். இவர்களுடன் ராதிகாவின் தந்தை ராஜேந்திரன் (35) வசித்து வருகிறார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு

    2 ஆண்டுகளுக்கு முன்பு

    கன்னியப்பன் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. வாக்களித்ததும் இல்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டார்.

    'சோஷியல் மீடியா' புரட்சி டைம்பாஸ்.. 'ஒரு விரல் புரட்சி' பெஸ்ட் , விரலை காட்டிய குஷ்பு 'சோஷியல் மீடியா' புரட்சி டைம்பாஸ்.. 'ஒரு விரல் புரட்சி' பெஸ்ட் , விரலை காட்டிய குஷ்பு

    சட்டவிரோதம்

    சட்டவிரோதம்

    கொத்தடிமைகள் எனப்படுவது குடும்பத்தில் ஏழ்மை நிலை காரணமாக அந்த ஊர் பணக்காரரிடம் பெற்ற கடனை அடைக்க முடியாமல் சந்ததி சந்ததியாக அவர்களுக்கு பணியாற்றி கடனை கழிப்பது ஆகும். இது சட்டவிரோதம்.

    ஒதுக்கீடு

    ஒதுக்கீடு

    இந்த நிலையில் இவர் இன்றைய தினம் முதல் முறையாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி இவருக்கு மருதாடு அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    செய்முறை விளக்கம்

    செய்முறை விளக்கம்

    85 வயதில் முதல் முறையாக வாக்களிக்க இருந்த தொழிலாளி உள்பட 7 பேரிடமும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து ஆட்சியர் கந்தசாமி நேரடியாக மருதாடு கிராமம் சென்று அடையாள அட்டை வழங்கி செயல் விளக்கம் அளித்து காட்டினார்.

    முதல் வாக்கு

    முதல் வாக்கு

    இந்த நிலையில் தேர்தல் நாளான இன்று கன்னியப்பனை ஆட்சியர் கந்தசாமி மலர் அலங்காரம் செய்யப்பட்ட காரில் மருதாடு வாக்குச் சாவடி மையத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார். பின்னர் கன்னியப்பன் உள்பட 8 பேரும் தனது முதல் வாக்கை பதிவு செய்தனர்.

    English summary
    Bonded labours Kanniyappan and 7 more were casted their vote for the first time in their life in Thiruvannamalai. Collector Kandasamy trained them to do voting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X