• search
திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"ஜாதி".. லாரிக்கு அடியில்.. அதுவும் உயிருக்கு போராடும்போது.. இப்படியா.. அதிர்ச்சி தந்த போலீஸ்காரர்

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: விபத்தில் சிக்கி ஒருத்தர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிட்டு இருந்தாராம்.. அவர்கிட்ட போயி "உன் ஜாதி என்ன" என்று கேட்டாராம் ஒரு போலீஸ்காரர்.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!

திருவண்ணாமலை பகுதியில் கட்டிட வேலை செய்வதற்காக ஆட்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது...

குமாரபாளையம் ஹைவேஸில் சென்று கொண்டிருந்தபோது, காவிரி மேம்பாலம் அருகே வந்தபோது, ஒரு வாகனம் முன்சென்று கொண்டிருந்தது...

பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வூட்டும் போலீஸ்காரர் பாலா.. கைகளை தட்டி உற்சாகமூட்டும் மதுரைவாசிகள்..!பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வூட்டும் போலீஸ்காரர் பாலா.. கைகளை தட்டி உற்சாகமூட்டும் மதுரைவாசிகள்..!

வண்டி

வண்டி

அந்த வண்டியை ஓவர்டேக் செய்ய கண்டெய்னர் லாரி முயன்றுள்ளது.. அதற்காக வலதுபுறமாக திரும்பியபோது, திடீரென ஒரு பைக் குறுக்கே வந்துவிடவும், அதில் மோதிவிட்டது. அந்த பைக்கில் வந்த ராமசந்திரன் என்பவர், கண்டெய்னர் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி கொண்டார்.. மண்டை உடைந்து அவருக்கு ரத்தம் கொட்டியது.. லாரிக்கு அடியில் உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை பார்த்து பலரும் ஓடிவந்தனர்..

வீடியோ

வீடியோ

அந்த வகையில், குமாரபாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அத்தியப்பனும் அங்கு வந்தார்.. லாரிக்கு அடியில் நுழைந்து ராமச்சந்திரனை காப்பாற்றாமல் உன் ஜாதி என்ன என்று கேட்டுள்ளார்.. இதுதான் வீடியோவாகவும் வெளிவந்து அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டுள்ளது.

கண்டனம்

கண்டனம்

இவர் ஏன் ஜாதி கேட்டார்? அதுவும் அந்தநேரத்தில் எதற்காக ஜாதி கேட்க வேண்டும்? ஜாதி தெரிந்தால் தான் அவரை காப்பாற்ற முயற்சி செய்திருப்பாரா? தனக்கு பிடிக்காத ஜாதி என்றால், ராமச்சந்திரனை அப்படியே போட்டுவிட்டு போயிருப்பாரோ? என்றெல்லாம் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.. இந்த வீடியோவை பலரும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

 காட்டுமிராண்டித்தனம்

காட்டுமிராண்டித்தனம்

இந்நிலையில், அத்தியப்பன் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளாராம்.. நாமக்கல் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.. அத்தியப்பன் ஒரு உதாரணம்தான்.. காவல்துறையில் இதுபோல் இன்னும் சிலர் இப்படி வெறிபிடித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. தேவையில்லாமல் சாமான்ய மக்களை மிரட்டுவதும், கொடூரமாக தாக்குவதும், கொல்வதும் என அராஜகங்கள் நீள்கின்றன.

வலிக்குதே

வலிக்குதே

எத்தனையோ போலீஸ்காரர்கள் தங்கள் இன்னுயிரை தந்து மக்களுக்கு பாதுகாப்பு தந்து கொண்டிருக்கும்போது, இப்படியும் சிலர் இருந்து வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. சேலத்தில் விவசாயி முருகேசனை லத்தியல் அடித்து கொன்ற அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை.. அதற்குள் இப்படி ஒரு வெறித்தனம்.. அமெரிக்காவில் ஜார்ஜ்ஜின் கழுத்தை நெரித்து கொன்றபோது, "ஐயோ.. மூச்சு முட்டுதே.. வலிக்குதே" என்று கதறினார்.. முருகேசனும் ஐயோ விடுங்க சார்.. வலிக்குது என்று கதறினார்.. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

ஜார்ஜ்

ஜார்ஜ்

ஜார்ஜ் மரணத்துக்கு பிறகு, போலீசாருக்கு ஒரு ஒழுங்குமுறை விதிகளை ஏற்படுத்தி தந்ததுபோல, இங்கும் சில வரைமுறைகளையும், விதிமுறைகளையும் செய்ய வேண்டி உள்ளது.. தவறு செய்த போலீசார் மீது, வெறும் டிரான்ஸ்பர் என்ற துறை ரீதியான கண்துடைப்பு நடவடிக்கையையும் மீறி, கடுமையான தண்டனைகளும் தர வேண்டி உள்ளது. போலீஸ்காரர்கள், ஜாதி பெயரை கேட்டாலும் ஆயுதப்படை? கொலையே செய்தாலும் ஆயுதப்படையா? இதுக்கு ஒரு முடிவே இல்லையா? விடிவே கிடையாதா?

English summary
Policeman asked the caste name and was transferred to the armed forces
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X