திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை மாத தீபத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Public holiday declared for Thiruvannamalai district for tomorrow

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பஞ்சரத தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் காட்சியளித்ததும் சரியாக மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்தோடு, பல லட்சம் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கிரிவலம் செய்தனர். எனவே திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Public holiday declared for Thiruvannamalai district for tomorrow

நிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்கநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க

இதையொட்டி, திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, இன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பத்தாம் தேதியான இன்று, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளையும் விடுமுறை வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை தீபத்தை தரிசிக்க நாளையும் அதிக பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

English summary
Public holiday declared for Thiruvannamalai district on tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X