திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் கார்த்திகைத் தீபத் திருநாள் கோலாகலம்.. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கார்த்திகைத் தீபத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அண்ணாமலையாரை போற்றி மக்கள் வீடுகளில் கார்த்திகைத் தீபம் ஏற்றிய நிலையில் திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டப்பட்டது.

திருவண்ணாமலையை சுற்றி 20 கி.மீ.சுற்றளவுக்கு இந்த மகாதீபத்தின் சுடரொளியை காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபத் திருநாள்

தீபத் திருநாள்

தமிழகம் முழுவதும் கார்த்திகைத் தீப திருநாளையொட்டி வீடுகளில் விளக்கேற்றி மக்கள் சிவனை வணங்கினர். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், பழனி, திருச்சி, ஆகிய இடங்களில் மகா தீபங்கள் ஏற்றப்பட்டது. கொரோனா எதிரொலி காரணமாக கோயில்களில் இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.

3,500 கிலோ நெய்

3,500 கிலோ நெய்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக ஆயிரம் மீட்டர் திரியும், 3,500 லிட்டர் நெய்யும் பயன்படுத்தப்பட்டது. திருவண்ணாமலையில் மகா தீபத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் நிலையில் இந்தாண்டு ஆயிரக்கணக்கில் மட்டுமே பக்தர்களை காண முடிந்தது.

செக் போஸ்ட்

செக் போஸ்ட்

வெளிமாவட்ட பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தும் கூட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை 15 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த செக்போஸ்ட் மூலம் சோதனை செய்தி திருப்பி அனுப்பும் பணியை போலீஸ் மேற்கொண்டது.

எம்.எல்.ஏ.க்கள்

எம்.எல்.ஏ.க்கள்

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொண்டனர். இதனிடையே திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக 5 மாவட்ட எஸ்.பி.க்கள் உட்பட 2500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu people Celebrated Karthigai deepa thirunal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X