திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா? சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி!

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடந்த போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: தமிழகத்தில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடந்த போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டிற்கும் சேர்த்து அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்.

திருவண்ணாமலையில் திமுக சார்பில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து நிறைய சந்தேகங்களை எழுப்பினார்.

கட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம் கட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்

ஸ்டாலின் பிரச்சாரம்

ஸ்டாலின் பிரச்சாரம்

ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வந்துள்ளது. திமுகவின் சட்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணத்தில் இருந்தது ஜெயலலிதாவின் கைரேகை அல்ல என்பது உறுதியாகி உள்ளது.

விசாரணை செய்வேன்

விசாரணை செய்வேன்

இதனால் இதை உடனடியாக விசாரணை செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன்தான் இருந்தாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்து இருக்கிறது. பதவியில் இருந்த ஒரு முதல்வரின் மரணத்தில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகிறது.

அதிமுக அரசு

அதிமுக அரசு

இதை இந்த ஆளும் அதிமுக அரசு விசாரிக்காது. ஆனால் இதை திமுக விசாரிக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை வேகமாக விசாரிப்போம். இதில் தவறு செய்த எல்லோருக்கும் தண்டனை வாங்கி கொடுப்போம் என்று ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

ஏன் இந்த கேள்வி

ஏன் இந்த கேள்வி

முன்னதாக திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் பெற்றி வெற்றி செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஜெ. கைரேகையில் குழறுபடி உள்ளது தெளிவாகிவிட்டது.அப்பல்லோவில் ஜெ. சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது கைரேகை பெறப்பட்டது எப்படி என்று விளக்கம் அளிக்கப்படவில்லை. அதனால் ஜெயலலிதா வைத்த கைரேகை செல்லாது என்று ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
Was Jayalalitha even alive while Thiruparankundram by-elections happened? asks DMK chief M K Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X