திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த கேஸ் தான் சீரியஸ்.. மூன்றாம் நிலைக்கு நுழைஞ்சுசுட்டோம்.. திருவண்ணாமலை கலெக்டர் வேதனை

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: எது நடக்க கூடாது என்று நினைத்திருந்தோமே அது நடந்து விட்டது -முன்றாம் நிலையில் எந்தவிதமான தொற்று இருக்க கூடாது என்ற நிலையில் மீண்டும் ஒருவர் பாதிப்பால் மூன்றாம் நிலையின் தொடக்கத்திற்கு வந்து விட்டோம் -ஆகவே அனைவரும் வீட்டிலேயே இருங்கள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    மூன்றாம் நிலைக்கு நுழைச்சுட்டோம்... திருவண்ணாமலை கலெக்டர் உருக்கமான வீடியோ

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: "வணக்கம் திருவண்ணாமலை மாவட்டத்திற்க நான் கடந்த சில நாட்களாக உங்களுக்கு செய்தி சொல்லாமல் இருந்ததற்கு காரணம், உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்ல வேண்டும் என்று நினைத்து காத்திருந்தேன். ஆனால் மகிழ்ச்சியான செய்தி சொல்வதற்கு முன்பு ஒரு சம்பவம் ஒன்று நடந்துவிட்டது. அதை சொல்வதற்காகவே இந்த பதிவு வெளியிடுகிறேன்.

    நமது (திருவண்ணாமலை) மாவட்டத்தில் இதுவரை 44 பேரை பரிசோதனை செய்ததில் 10பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அந்த 10 பேருடன் இருக்கக்கூடிய முதல் தொடர்பாக உள்ளவர்களான வீட்டில் இருப்பவர்களிடம் பாசிட்டிவாக இருப்பருக்கு கொரோனா வந்துள்ளது. நெகட்டிவ் உள்ளவரின் வீட்டில் உள்ள ஒருவருக்கும் வந்துள்ளது.

    கொரோனா ரத்தம் முதல் இஸ்ரேல் தடுப்பூசி வரை.. பரபரக்கும் விற்பனை.. அதிர வைக்கும் டார்க் வெப் மோசடிகள்!கொரோனா ரத்தம் முதல் இஸ்ரேல் தடுப்பூசி வரை.. பரபரக்கும் விற்பனை.. அதிர வைக்கும் டார்க் வெப் மோசடிகள்!

    2 பேர் சிகிச்சை

    2 பேர் சிகிச்சை

    கொரோனா வைரஸ் தொற்றின் குணத்தை நம்மால் பிரிந்து கொள்ள முடியவில்லை. மொத்தம் 12 ஆக இருந்த நிலையில் 10 பேரை குணப்படுத்தி அனுப்பி வைத்தோம். அதில் ஒருவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள 9 பேர் ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு தனிமைப்படுத்துதல் வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் அவர்கள் வீட்டுக்கு சென்றுவிடுவார்கள்.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இந்நிலையில் 2 நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இன்றைக்கு வந்து செய்யாறு பகுதியை சோந்த சுகாதார பிரிவில் பணியாற்றி வந்த ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இது தான் மிகவும் வருந்தக்கூடிய விஷயம். ஏனென்றால் மூன்றாம் நிலையில் எந்த விதமான தொற்று இருக்கக்கூடாது கூடாது என்று உழைத்து அதற்கு பலன் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில் ஒரு நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார். 12 நோயாளிகள் இருக்கையில் ஏன் இந்த ஒன்றை பற்றி கவலைப்படுகிறீர்கள் என்று நீங்கள் நினைத்ததால், எனக்கு இந்த ஒன்று தான் ரொம்ப சீரியஸ் கேஸ். 3வது நிலைக்கு போறதுக்கு இதுதான் முதல் தொடக்கம்.

    எப்போது வந்தது

    எப்போது வந்தது

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளரின் வேலை என்னவென்றால், வெளிநாடுகளுக்கு சென்று வந்த 20 வீடுகளில் தங்கியுள்ள நபர்களை கண்காணிக்கும் பணியில் இருந்துள்ளார். இந்த 20 வீடுகளில் உள்ள யாருக்கும் இல்லை. இவருடைய வேலை அடிக்கடி அவர்களை சென்று சோதிப்பது, அறிகுறி உள்ளதா என்று பார்ப்பார். இந்நிலையில் குவாரண்டைன் முடியும் போது அனைவருக்கும் சாம்பிள் எடுத்து பார்க்கப்பட்டது. அதில் அந்த டீமில் இருந்த யாருக்குமே கொரோனா இல்லை. இப்போது இவருக்கு பாசிட்டிவ் வந்துவிட்டது.

    நீளமான பட்டியல் உள்ளது

    நீளமான பட்டியல் உள்ளது

    இப்போது இவருக்கு யாரிடம் இருந்து பாசிட்டிவ் வந்தது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை. இப்போது தான் சாம்பிள் எடுத்தோம். 20ம் தேதி சாம்பிள் வாங்கியதில் இன்று ரிசல்ட் வந்துள்ளது. அதற்கு முன்பு இவருக்கு எத்தனை நாட்கள் கொரோனா பாசிட்டிவ் இருந்தது என்று நமக்கு தெரியாது. ஐந்து நாட்களுக்கு முன்பு இருந்து இவருடைய டிராவல் ஹிஸ்ட்ரியை பார்த்தோம் என்றால் நீளமாக போய்க்கொண்டே உள்ளது. சொந்த காரர்கள், பழகியவ்ர்கள் வேலை செய்பவர்கள் என எல்லோரையும் தேடி கண்டுபிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அப்படி கண்டுபிடிக்கப்பட்டவர்களில் யாருக்கேனும் கொரோனா வந்திருந்தால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

    கலெக்டர் உருக்கம்

    கலெக்டர் உருக்கம்

    இந்த நிலை வரக்கூடாது என்பதற்க்காகத்தான் பொது மக்களை வீட்டிலேயே இருக்கவும்,பொது வெளியல் வரக்கூடாது என்றும்,சமூக இடைவெளியை பின்பற்றவும் பல விதமான அறிவுறைகள் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்தும் தற்போது இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தயவு செய்து பொது மக்கள் பொது வெளியல் செல்லாமல் வீட்டிலேயே இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள்" இவ்வாறு உருக்கமான ஆட்சியர் கந்தசாமி வீடியா வெளியிட்டுள்ளார்.

    English summary
    Thiruvannamalai Collector kanthasamy worrys that We have entered the third stage of covid 19:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X