திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: நிலத்தடி நீர், மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார்.

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில், தூய்மை அருணை என்ற அமைப்பின் சார்பில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு, திரைப்பட நடிகர் விவேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

We have left the Western Ghats without maintenance Says Actor Vivek

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விவேக், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காததால் நமது ஆறுகளில் நீர் வளம் குறைந்து விட்டது என்று குறிப்பிட்டார். மக்கள் இப்போதாவது விழிப்படைந்து, நிலத்தடி நீர், மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், உலக பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக, மேற்குத் தொடர்ச்சி மலையை அறிவித்த யுனெஸ்கோ, அதனை திரும்பப் பெற்றுக்கொள்ளுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளதாக, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

இங்க பாருங்க.. நாங்களும்தான் இறக்கி விட்டோம்.. ஆனால் அந்த 2 பேரும் என்ன செஞ்சாங்க தெரியுமா இங்க பாருங்க.. நாங்களும்தான் இறக்கி விட்டோம்.. ஆனால் அந்த 2 பேரும் என்ன செஞ்சாங்க தெரியுமா

தமிழகத்தில் மழை இல்லாத நிலை நீடிக்குமானால், ஆறுகள் பாலைவனமாகி, நிலத்தடி நீர்மட்டம் வறண்டு, விவசாயம் முற்றிலும் அழியும் நிலை உருவாகும் என்றார். எனவே, மரம் நடுவதை தேசிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள், நீர் நிலைகளை தூர்வாரி சீரமைப்பதுடன், மரம் நடும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நடிகர் விவேக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது.
விடுமுறை, பிறந்த நாட்களை மாணவர்கள் மரம் நட்டு கொண்டாட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர் வார வேண்டும் என்றார். பசுமை கலாம் என்ற அமைப்பின் மூலம், தமிழகத்தில் மரக்கன்றுகள் நடும் சேவையில் தன்னை ஈடுபடுத்தி வரும் நடிகர் விவேக், 1 கோடி மரங்களை நடுவதற்கு, இலக்கு நிர்ணயித்து சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 'நம்ம சென்னை' அமைப்பு சார்பில், சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

English summary
Actor Vivek Said that We have left the Western Ghats without maintenance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X