• search
திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சுஜாதாவுக்கு வந்த டென்ஷன்.. யாருமில்லாத நேரத்தில்.. தன்னைத் தானே.. கள்ளக்குறிச்சியே நடுங்கி போச்சு!

|

கள்ளக்குறிச்சி: வீட்டில் யாருமில்லாத நேரத்தில்.. உடன் பிறந்த அக்காவையும், ஒரு வயது குழந்தையையும் தங்கை மிக கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி சின்னசாமி.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. இவரது மனைவி மயில்.. சின்னசாமி தற்போது பெங்களூரில் கூலி வேலை பார்த்து வருகிறார்.

மயில் வயல்வேலைக்கு சென்று வருகிறார்.. இவர்களது மகள்கள் சுமதி, சுஜாதா.. 2 பேருக்குமே கல்யாணமாகிவிட்டது.

குழந்தை

குழந்தை

இந்நிலையில், இளைய மகள் சுஜாதா பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்திருந்தார்.. 6 மாதமாக அம்மா வீட்டில்தான் குழந்தையுடன் தங்கி உள்ளார்.. 10 நாளைக்கு முன்பு தான் மூத்த மகள் சுமதி, தன்னுடைய ஒரு வயது மகள் ஸ்ரீநிதியுடன் அம்மா வீட்டிற்கு வந்தார்... தினமும் மயில், வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் அக்கா சுமதியும் தங்கை சுஜாதாவும்தான் இருந்துள்ளனர்.

நெருப்பு

நெருப்பு

இந்நிலையில், சம்பவத்தன்று மதியம் 1 மணி இருக்கும். அப்போது திடீரென சுமதி தீயில் தீப்பற்றி எரிந்தார்.. வீட்டிற்குள் இருந்து உடம்பெல்லாம் பற்றிய நெருப்போடு அலறி கொண்டே வெளியே ஓடி வந்தார்.. இதனால் சத்தம் கேட்டு அங்கிருந்த சுஜாதாவும், அக்கம்பக்கத்தினரும் ஓடிச்சென்று பார்த்தால், குழந்தை ஸ்ரீநிதியும் தீயில் எரிந்து கொண்டு, அலறி துடித்து கொண்டிருப்பதை கண்டு பதறினர்.

ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

உடனடியாக தாய், மகள் மீதிருந்த நெருப்பை அணைத்தனர்.. ஆம்புலன்ஸை வரவழைத்து, இருவரையும் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

ஆனால், சுமதி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.. குழந்தையும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்துவிட்டது... இது தொடர்பாக வரஞ்சரம் போலீசில் உயிரிழந்த பெண்ணின் அப்பா புகார் தந்தார். அந்த புகாரில், சுமதிக்கு பேய் பிடித்துவிட்டது.. அதனால்தான், தன்னைத்தானே கொடுவாளால் வெட்டிக் கொண்டும், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தும், பக்கத்தில் இருந்த குழந்தைக்கும் அதே மண்ணெண்ணையை ஊற்றி எரித்து கொண்டார்" என்று கூறியிருந்தார்.

 பேய் பிடித்ததா?

பேய் பிடித்ததா?

இந்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்... உண்மையிலேயே சுமதிக்கு பேய் பிடித்துவிட்டதா என்று தெரியவில்லை.. அதேபோல, வீட்டில் சுஜாதா இருந்த நிலையில், அக்கா - தங்கைக்குள் ஏதாவது பிரச்சனையா? அதனால் இந்த விபரீதம் ஏற்பட்டதா என்ற ரீதியில் விசாரணை துரிதமானது. தற்போது போலீசார் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர்ந்துவிட்டனர்.. சுமதியை சுஜாதான் கொலை செய்தது தெரியவந்துள்ளது..

துப்பு

துப்பு

சம்பவத்தன்று சுமதிக்கும் , சுஜாதாவிற்கும் வீட்டிற்குள் சண்டை நடந்துள்ளது என்று போலீசாருக்கு ஒரு துப்பு கிடைத்தது.. அந்த துப்பு வைத்து கொண்டுதான் மொத்த விஷயத்தையும் அம்பலப்படுத்தினர் போலீசார்.. சுமதியின் தந்தை சின்னசாமி சொந்தமாக 20 சென்ட் நிலம் வாங்கியுள்ளாராம்.. அதனை பெற்று கொள்வதில், அக்கா, தங்கைக்கு தகராறு இருந்திருக்கிறது.

 அரிவாள்

அரிவாள்

சம்பத்தன்றும் வீட்டில் யாருமில்லாதபோது 2 பேருக்கும் தகராறு முற்றி உள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சுஜாதா, வீட்டிற்குள் ஓடபோய், மயிலு வேலைக்கு எடுத்து செல்லும் கொடுவாளை கொண்டுவந்து சுமதியை சரமாரியாக வெட்டி விட்டார்.. பிறகு பக்கத்தில் இருந்த குழந்தை ஸ்ரீநிதியையும் அரிவாளால் வெட்டினார்.. 2 பேருமே உடல் துடிக்க கதறி வெடித்தனர்.

 ஜெயில்

ஜெயில்

அப்போதும் ஆத்திரம் அடங்காத சுஜாதா, கிச்சனில் இருந்து உடலில் மண்ணெண்ணெய்யை எடுத்து வந்து தாய்-சேய் மீது ஊற்றி நெருப்பை பற்றி வைத்துவிட்டார் சுஜாதா.. வீட்டிற்கு பெற்றோர், வந்து பார்க்கும்போது, கையில் கொடுவாளுடன் சுஜாதா நின்று கொண்டிருப்பதை பார்த்து பதறிபோய்விட்டனர். மேலும், மகளின் தவறை மறைக்கவேபேய் பிடித்துவிட்டது என்று பொய்யான புகார் சொன்னதும் தெரியவந்தது. இதனையடுத்து சுஜாதாவை வரஞ்சரம் போலீசார் கைது செய்து, குழந்தையுடன் கடலூர் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

English summary
Younger Sister murdered her Elder near Kallakkurichi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X