திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலில் தோல்வி.. காசு வாங்கிய நாயே.. ஓட்டுப் போட்டியா.. போஸ்டர் அடித்து திட்டிய வேட்பாளர்!

Google Oneindia Tamil News

திருவாரூர்: உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு பெற முயன்ற வேட்பாளர் ஒருவர் தோல்வியடைந்ததால் பணம் வாங்கியவர்களை திட்டி வீதி வீதியாக போஸ்டர் ஒட்டியுள்ளார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். 27 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி 2 நாட்களாக நடைபெற்றது.

ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக அநீதி... ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம்... ராமதாஸ் விளாசல் ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக அநீதி... ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம்... ராமதாஸ் விளாசல்

திமுக

திமுக

மேற்கு மாவட்டங்களில் அதிமுகவும், தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் திமுகவும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

மக்களை சந்தித்து

மக்களை சந்தித்து

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டுகின்றனர். இன்னும் சிலரோ நேரடியாக மக்களை சந்தித்து கைகூப்பி வணங்கி வருகின்றனர்.

பரபரப்பு

பரபரப்பு

ஆனால் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் ஒரு வேட்பாளர் "காசு வாங்கிய நாயே ஓட்டு போட்டாயா" என நோட்டீஸ் ஒட்டியுள்ளார். அவர் தனது பெயரை குறிப்பிடாமல் போஸ்டர் ஒட்டியுள்ளார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

விசாரணை

விசாரணை

தேர்தல் விதிமுறைப்படி ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் குற்றமாகும். ஆனால் வாக்காளர்கள் கொடுத்த பணத்திற்கு ஓட்டு போடவில்லை என வேட்பாளர் ஒருவர் திட்டி போஸ்டர் ஒட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்களின் புகாரின் பேரில் கோட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A candidate in Thiruvarur district pastes poster using derrogatory comments on voter that despite they get money they failed from voting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X